Tuesday , February 4 2025
Home / சினிமா செய்திகள் / ஓவியாவிற்கு இலங்கையிலிருந்து வந்த பரிசு!!! என்ன தெரியுமா?

ஓவியாவிற்கு இலங்கையிலிருந்து வந்த பரிசு!!! என்ன தெரியுமா?

தமிழில் சிறிது நாட்களாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தவித்து கொண்டிருந்தார் ஓவியா. வேறு வழி இல்லாமல், தனியார் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு நிலைமையே வேறு.

Loading…


அவரின் நேர்மைக்காகவே தமிழ்நாட்டில் ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். ஓவியாவின் மார்க்கெட் உயர்ந்ததால் அதிக பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓவியா கிளம்பிச் சென்றாலும் ஓவியா ஆர்மி இன்னும் சமூக வலைதளங்களில் ஓவியாவை புகழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இலங்கையை சேர்ந்த கலைஞர்கள், பிரேம் ராஜ், யஜீவன், பிரசாதன், ரமேஷ்காந்த், பிரபு ஆகியோர் ‘வந்துட்டேன்னு சொல்லு’ என்ற ஓவியா ஆர்மி பாடலை பாடி வெளியிட்டுள்ளார்கள்.

பாடலில் ஓவியாவின் குணம், அவர் பிக் பாஸ் வீட்டில் பேசியது ஆகியவற்றை தெரிவித்துள்ளனர்.

தற்போது நாடு விட்டு நாடு பாய்ந்துள்ள ‘ஓவியா ஆர்மி’ வெகுவிரைவில் கண்டம் விட்டு கண்டம் பாயலாம்.

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …