இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்ததும் குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
“ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டவுடன் அது மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்படும். அதனைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்படும்.
பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கு மேலதிகமாக புலனாய்வுப் பொலிஸாரோ, பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினரோ விசாரணை நடத்தத் தேவையில்லை. அதனால் குற்றவாளிகளுக்கு எதிரான சட்டநடவடிக்கைகளில் எவ்விதகால தாமதமும் ஏற்பட இடமில்லை” – என்று அவர் மேலும் கூறினார்.