Saturday , November 16 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / டிரம்ப் விசா தடைக்கு 55 சதவீதம் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு

டிரம்ப் விசா தடைக்கு 55 சதவீதம் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு

டிரம்ப் விசா தடைக்கு 55 சதவீதம் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு

டிரம்ப் ‘விசா’ தடைக்கு 55 சதவீத ஐரோப்பியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்காவுக்குள் ஈரான், ஈராக் மற்றும் சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் நுழைய 90 நாட்களுக்கு அதிபர் டிரம்ப் விசா தடை விதித்துள்ளார். அகதிகள் நுழைய 120 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் இத்தகைய நடவடிக்கை குறித்து ஐரோப்பா கண்டத்தின் பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, கிரிஸ், ஹங்கேரி, இத்தாலி. போலந்து, ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் பேரில் ஆன்லைனில் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதற்கு 55 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். போலந்தில் 71 சதவீதமும், ஜெர்மனியில் 53 சதவீதம், இங்கிலாந்து மற்றும் ஸ்பெயினில் 41 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.

‘விசா’ தடையை இளைஞர்களை விட முதியவர்கள் ஆதரிக்கின்றனர். அதே நேரத்தில் அகதிகள் நுழைய விதிக்கப்பட்ட தடையை கல்லூரி மாணவர்கள் பெருமளவில் வரவேற்றுள்ளனர்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …