ஈஸ்டர் பயங்கரவாத நினைவேந்தல் வழிபாடு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து இன்று (21) காலை ஓராண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு யாழ் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஆயர் இல்லத்தில் இன்று காலை 8.45 மணிக்கு இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நினைவேந்தலில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் உள்ளிட்ட மதகுருமார்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கொரோனா தொற்றிலிருந்து நாட்டு மக்கள் மிக விரைவில் மீள வேண்டுமென்றும் பிராத்தனை செய்யப்பட்டிருந்தது.
பயனுள்ள இணைப்புகள் இங்கே




