நேபாளத்தில் 4.6 என்ற ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம்
காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் காலை 9.22 மணிக்கு முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின் படி இது ரிக்டர் அளவு கோலில் 4.6 ஆக பதிவாகி இருந்தது.
அதைத் தொடர்ந்து 10.06 மணிக்கு மேற்கு நேபாளின் ஸ்வன்ரா பகுதிக்கு அருகில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி இருந்தது. மத்திய நேபாளத்தின் சாலு பகுதியை மையமாக கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்ற தகவல் தெரியவில்லை. அதேபோல் உயிரிழப்பு குறித்தும் எந்த தகவலும் இல்லை.
முன்னதாக கடந்த 2015-ம் ஆண்டு 7.8 என்ற ரிக்டர் அளவில் நேபாளத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்பொழுது முதல் இதுவரை 478 நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.