Sunday , May 19 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / அமெரிக்க அதிபர் வழியில் குவைத், பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு தடை

அமெரிக்க அதிபர் வழியில் குவைத், பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு தடை

அமெரிக்க அதிபர் வழியில் குவைத், பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு தடை

 

அமெரிக்க அதிபர் டிரம்பின் சமீபத்திய நடவடிக்கையைப் போல, பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளிலிருந்து அகதிகளாக வருவோருக்கு விசாவை நிறுத்தி வைத்து குவைத் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வளைகுடா பகுதியில் முக்கியமான நாடுகளில் ஒன்றான குவைத், எண்ணெய் வளம் மிக்கது. அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக சிரியா, ஈரான் உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் இருந்து வருவோருக்கு விசாவை தற்காலிகமாக தடை செய்து உத்தரவிட்டிருந்தார்.

தற்போது, அமெரிக்காவின் நடைமுறையை பின்பற்றியுள்ள குவைத் அரசானது, பாகிஸ்தான், சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது. மேலும், விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டாம் எனவும் மேற்கண்ட ஐந்து நாட்டவர்களுக்கு குவைத் அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டில் குவைத் நகரில் நடந்த குண்டு வெடிப்பில் 27 பொது மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், இதே போல தாக்குதல்கள் நடைபெறலாம் என எச்சரிக்கை நடவடிக்கையாக குவைத் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …