கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுவதால் தொண்டர்கள் யாரும் கேக் வெட்டி கொண்டாட வேண்டாம் – எடியூரப்பா
கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா இன்று தனது 74-வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார்.
கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா இன்று தனது 74-வது பிறந்த நாளையொட்டி கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுவதால் தொண்டர்கள் யாரும் கேக் வெட்டி கொண்டாட வேண்டாம்.தற்போது கடுமையான வறட்சி நிலவுவதால் அந்தந்த பகுதியில் இருக்கிற குளங்களை தூர்வார தொண்டர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இன்று காலையில் எடியூரப்பா தும்கூர் மாவட்டத்தில் உள்ள சித்தகங்கா மடத்திற்கு சென்று அங்குள்ள மடாதிபதிகளிடம் ஆசீர்வாதம் பெற்ற பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் ரூ.25 லட்சம் செலவில் தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
இதே போல் மாநிலம் முழுவதும், பா.ஜ.க. தொண்டர்கள் நற்பணி செய்ய வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்தார்.
கர்நாடக மாநிலத்தில் அடுத்தது பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்காக அபிவிருத்தி பணிகளை தொடங்க வேண்டும். தற்போது கடுமையான வறட்சி நிலவுவதால் குடிப்பதற்கு நீர் இல்லை. ஆடம்பரம் எதுவும் இல்லாமல் அமைதியாக பா.ஜ.க.வினர் குளங்களில் தூர்வார வேண்டும். நமக்கு ஆடம்பரம் தேவையில்லை.
நான் ஆஸ்பத்திரிக்கு சென்று எனது பிறந்த நாளையொட்டி நோயாளிகளுக்கு பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்குகிறேன். இதை மாநிலம் முழுவதும் உள்ள தொண்டர்களும் பின்பற்ற வேண்டும்.
பெங்களூரில் உள்ள எல்லா பேரவை தொகுதிகளுக்கும் சென்று அபிவிருத்தி பணிகளுக்கு கவனம் செலுத்துவேன். அடுத்து நடைபெற உள்ள கர்நாடக சட்டபேரவை தேர்தலிலில் பெங்களூரில் உள்ள 22 தொகுதிகள் உள்பட மொத்தம் 150-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். கர்நாடக மாநிலத்தை மாதிரி மாநிலமாக மாற்ற பாரதிய ஜனதா கட்சியானால் மட்டுமே முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.