Friday , August 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இளநீர் குடிப்பது ஐ.தே.க; கோம்பை தின்பது நாமா? – சு.க. ஆவேசம்

இளநீர் குடிப்பது ஐ.தே.க; கோம்பை தின்பது நாமா? – சு.க. ஆவேசம்

“மத்திய வங்கி பிணைமுறி மோசடிக்கான பொறுப்பையோ அதனால் ஏற்பட்ட நட்டத்தையோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்காது. ஐக்கிய தேசியக் கட்சியே ஏற்க வேண்டும்.”
– இவ்வாறு மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“மத்திய வங்கி பிணைமுறி மோசடியானது நல்லாட்சிக்குப் பெரும் சவாலை விடுத்துள்ளது. இதனுடன் தொடர்புபட்டவர்கள் இன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளனர். அந்தக் குற்றச்சாட்டுக்கு இலக்கான ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மை தெரியாமல் உளறுகின்றனர். ஜனாதிபதியைப் பேசுகின்றனர். ஜனாதிபதிதான் முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும் என்று கூறுகின்றனர்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடிக்கான பொறுப்பையோ அதனால் ஏற்பட்ட நட்டத்தையோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்காது. ஐக்கிய தேசியக் கட்சியே ஏற்கவேண்டும்.
இதில் எமக்குத் தொடர்பு எதுவும் இல்லை. மத்திய வங்கி ஆளுநரை சிபாரிசு செய்தவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. பெர்பச்சுவல் நிறுவன உரிமையாளருக்கும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ரவி கருணாநாயக்கவுக்கும்தான் தொடர்பிருந்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் எவருக்குமே இதனுடன் தொடர்பில்லை. அப்படி இருக்கும்போது நாம் ஏன் பொறுப்பை ஏற்கவேண்டும்?” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …