டிரம்ப்பும் மோடியும் மே மாதம் முதல் முறையாக சந்திக்க வாய்ப்பு
டிரம்ப் -மோடி முதல் சந்திப்பு மே மாதம் நடைபெறவுள்ளதாக தகவல். பிரஸெல்ஸ் நகரில் நடைபெறும் ஜி-20 மாநாட்டின் போது சந்திப்பு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்ப்டுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘நேட்டோ’ அமைப்பின் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள மே மாதம் 25 ஆம் தேதி ஐரோப்பாவிலுள்ள பிரஸ்ஸசல்ஸ் நகருக்கு பயணம் செய்யவுள்ளார். அப்போது அவர் பல்வேறு நாட்டுத் தலைவர்களை சந்திக்கவுள்ளார். அம்மாநாடு முடிந்த உடன் டிரம்ப் ஜி-20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். அப்போது அவர் பிரதமர் மோடியை சந்திக்கின்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
டிரம்ப் பதவியேற்றவுடன் அவர் மோடியை வாஷிங்டன்னிற்கு அழைத்தார். அதே போல மோடியும் டிரம்பை இந்தியா வரும்படி அழைத்தார். இருவரும் பரஸ்பரம் பயணம் செய்ய ஒப்புக்கொண்டதால் அதிகாரிகள் வருகைத் தேதிகளை இறுதி செய்வதில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மே மாதத்திலேயே இருவரும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
நேட்டோ மாநாட்டிற்கு டிரம்ப் நீண்ட தூரம் பயணம் செய்வது ஆச்சரியத்தை அளித்துள்ளது. பொதுவாக அமெரிக்க அதிபர் அருகாமையிலுள்ள நாட்டிற்கே முதல் விஜயம் மேற்கொள்வது வழக்கம். தற்போது உலகத் தலைவர்கள் ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வாஷிங்டனில் கூடியுள்ளனர்.

