Saturday , August 23 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / புதரில் சிக்கிய குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்!

புதரில் சிக்கிய குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்!

ஆஸ்திரேலியாவில் காட்டுப்பகுதியில் இருக்கும் புதரில் சிக்கிய 3 வயது குழந்தையை இரவு முழுவதும் நாய் பாதுகாத்த சம்பவம் பெரும் வியப்பை வைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தை சேர்ந்த ஆரோரா என்ற 3வயது குழந்தை வீட்டை விட்டு வெளியேறி சுமார் 2 கி.மீ தூரம் வரை சென்றுள்ளார். அப்போது காட்டுப்பகுதியில் உள்ள புதரில் சிக்கிக்கொண்டார். அவரது வீட்டில் வளரும் மாக்ஸ் என்ற நாய் குழந்தையுடன் உடன்சென்றுள்ளது.

குழந்தையை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் அங்குள்ள மலைப்பகுதியில் தேடினர். குழந்தையை தேடுவதற்கான பணியில் 100க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்களும், தன்னார்வலர்களும் ஈடுபட்டனர். மலைப்பகுதியில் குழந்தையை மீட்க 2 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டது.

இதையடுத்து அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து அந்த் குழந்தையின் பாட்டி கூறியதாவது:-

அரோரா கத்து சத்தம் கேட்டது. நான் மலையை நோக்கி சென்றேன். மலையின் உச்சியை அடைந்தவுடன் மாக்ஸ், அரோரா இருக்கும் இடத்திற்கு என்னை அழைத்து சென்றது என்றார்.

மாக்ஸின் செயலை பாராட்டிய போலீசார், அதற்கு கௌரவ போலீஸ் நாய் என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தையை இரவு முழவதும் பாதுகாப்பாக காப்பாற்றிய மாக்சை பாராட்டி சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv