பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்ஷனில் ஒரு நபர் வெளியேறுவார் என்பது அனைவருக்கும் தெரியும்.
சுஜா தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டதன்படி இன்று அவர் தான் வெளியேறினார். மேலும் அவருடன் மீண்டும் வந்த ஆர்த்தி, ஜுலி, சக்தி மூவரும் வெளியேறி விட்டனர்.
சுஜா வெளியேறுவார் என்று கூறும்போது மற்ற அனைவரும் அசையாமல் இருந்தனர். அப்போது ஒவ்வொருவரிடமும் தனது கருத்தை வெளிப்படுத்தினார் சுஜா. இதில் ஆரவ்விடம் கூறும் போது, நீ உண்மையை கூற வேண்டும். இன்னும் 3 வாரம் தான் அதற்குள் நீ புரிந்து கொள் சொல்லிவிடு என்று கண்ணீருடன் கூறினார்.