Friday , August 22 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / துமிந்தவின் பதவியை பறிக்கவே வேண்டாம்! – அவர் சிறந்த இளம் தலைவர் என்கிறார் அமரவீர

துமிந்தவின் பதவியை பறிக்கவே வேண்டாம்! – அவர் சிறந்த இளம் தலைவர் என்கிறார் அமரவீர

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிலிருந்து அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை நீக்கவேண்டுமென அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரான இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா வலியுறுத்தியுள்ள நிலையில், அதற்குரிய தேவைப்பாடு இல்லையென அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.
துமிந்த திஸாநாயக்க சிறந்த இளம் தலைவராகச் செயற்பட்டுவருகின்றார் என்று சு.கவின் முக்கியஸ்தரான அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நெருங்கிய சகாக்களுள் ஒருவராகக் கருதப்படும் அமைச்சர் மஹிந்த அமரவீர, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராகவும் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …