Wednesday , August 27 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / இனவாத விவகாரத்தில் மவுனம் கூடாது: அமெரிக்க அமைச்சர்

இனவாத விவகாரத்தில் மவுனம் கூடாது: அமெரிக்க அமைச்சர்

அமெரிக்காவில் வெள்ளை இனவாதத்தை ஆதரிப்போருக்கும், நாஜி கருத்துகளைக் கடைப்பிடிப்போருக்கும் அந்நாட்டு முன்னாள் போர் வீரர்கள் விவகாரங்களுக்கான அமைச்சர் டேவிட் சுக்லின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எனினும் அதிபர் ட்ரம்ப் தொடர்பாக அவர் எந்த கருத்தையும் கூறவில்லை. தாம் கூறியிருப்பது தமது சொந்தக் கருத்து என்றும் அவர் தெரிவித்தார்.

வரலாற்றைப் புரிந்து கொண்டிருக்கும் நாம் அமைதியாக இருப்பது ஏற்புடையதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வெள்ளை இனவாத எதிர்ப்புப் பேரணியில் ஒரு பெண் கார் ஏற்றி கொல்லப்பட்டதற்கு உலகின் பல்வேறு இடங்களில் பேரணி மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …