Friday , August 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நாட்டைக் கட்டியெழுப்பும் சந்தர்ப்பமாக அனர்த்தத்தைப் பயன்படுத்த வேண்டும்! – ஜப்பானியத் தூதுவா் தெரிவிப்பு

நாட்டைக் கட்டியெழுப்பும் சந்தர்ப்பமாக அனர்த்தத்தைப் பயன்படுத்த வேண்டும்! – ஜப்பானியத் தூதுவா் தெரிவிப்பு

அனர்த்தம் ஏற்படும்போது அதனை மேலும் பாதுகாப்பான நெகிழ்திறன் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான சந்தா்ப்பமாகப் பயன்படுத்த வேண்டும் என இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவா் கெனிச்சி சுகனுமா தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய குழு வெள்ளம் மற்றும் மண்சாிவுகளுக்கான காரணத்தை ஆராய்ந்ததுள்ளதோடு, பல திட்டங்களையும் பரிந்துரைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இலங்கையின் தென் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சாிவுகள் தொடா்பாக ஆய்வு மேற்கொண்ட ஜப்பானிய அனா்த்த நிவாரண நிபுணா் குழு, அதன் இறுதி அறிக்கையை அனா்த்த முகாமைத்துவ அமைச்சில் வைத்து அரச தரப்பினாிடம் கையளித்தது.

அரசின் சாா்பில் அனா்த்த முகாமைத்துவ அமைச்சா் அநுர பிரியதா்ஸன யாப்பா, நீா்பாசன மற்றும் நீா் வழங்கல், முகாமைத்துவ அமைச்சா் விஜித் விஜேயமுனி சொய்ஸா மற்றும் ஜனாதிபதியின் செயலாளா் பி.பி.அபேகோன் ஆகியோா் அறிக்கையைப் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது ஊடக சந்திப்பு ஒன்றும் நடைபெற்றது.

ஜப்பானியத் தூதுவா் கெனிச்சி சுகனுமா கருத்து வெளியிடுகையில்,

“ஜப்பானிய குழு வெள்ளம் மற்றும் மண்சாிவுகளுக்கான காரணத்தை ஆராய்ந்தது. பல திட்டங்களையும் பரிந்துரைத்தது. அனா்த்தம் இடம்பெற்றுள்ள இந்தச் சந்தா்ப்பத்தை நாம் மேலும் பாதுகாப்பான நெகிழ்திறன் கொண்ட இலங்கை கட்டியெழுப்புவதற்காக பயன்படுத்த வேண்டும்.

அனா்த்த இடம்பெற்ற சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி உட்கட்டுமானங்களை மேம்படுத்துவதானது மீண்டுமாக சிறப்பாக கட்டியெழுப்புதல் என்ற கருத்திட்டத்தை மையப்படுத்தியதாகும்.

இந்தக் கருத்திட்டமானது ஐ.நாவின் அனா்த்த முகாமைத்துவ மாநாடுகளில் வலியுறுத்தப்படுவதாகும்.

உலகெங்கிலும் இந்தக் கருத்திட்டத்தை முன்னெடுக்குமாறு ஊக்குவிக்கப்படுகின்றது. அந்தவகையில் நாம் ஒத்துழைப்பதுடன் ஒவ்வொரு நாடும் அனா்த்த தவிா்ப்பு முகாமைத்துவத்திட்டங்களில் முதலிடுவதற்கு ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலமாக எதிா்காலத்தில் ஏற்படக்கூடிய பல அனா்த்தங்களைத் தவிா்க்கமுடியும் என்பதுடன் எமது எதிா்கால சந்ததிக்கு பாதுகாப்பானதும் நெகழ்திறன் கொண்டதுமான நாட்டை பெற்றுக்கொடுக்க முடியும்” – என்றார்.

இந்த ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்துகொண்ட அனா்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பாவிடம் ஊடகவியலாளா்கள் கேள்விகளை எழுப்பினா்.

மீதொட்ட முல்ல அனா்த்தத்தின்போதும் ஜப்பானியக் குழு ஆராய்ந்து அறிக்கை சமா்ப்பித்தது. தற்போதும் சமா்ப்பித்துள்ளது. இவை வெறுமனே அறிக்கைக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படுமா? என்று ஊடகவியலாளா்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கும்போது,

“இல்லை இவை வெறுமனே அறிக்கைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படமாட்டாது. குப்பைமேடு பாரம் கூடி உடைந்து வீழ்ந்தது. தற்போது ஜப்பானியக் குழுவின் பரிந்துரைக்கு அமைவாக எமது பொறியிலாளா்களைப் பயன்படு குப்பை மேட்டு பகுதியை இறுக்கமுடையதாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதுவும் அப்படியே. நாம் எப்போதும் மக்களை வெள்ளத்தில் மூழ்கி மரணிக்க இடமளிக்கமுடியாது. அதற்குப் பொது வேலைத்திட்டம் அவசியம். அந்தப்பகுதியில் எமக்கு பெரும் பொருளாதாரம் உள்ளது. அந்தப் பொருளாதார முறைமை உடைந்துவிழ இடமளிக்க முடியாது. அப்படியாயின் அவா்கள் வசதிகளுடன் வாழ்வதற்கும் இலகுவாக நீா்வழிந்தோடுவதற்கும் வழிவகை செய்ய வேண்டும். அதற்கு முதலீடு செய்யவேண்டும். அதற்கு ஜப்பான் போன்ற நாடுகள் முன்வரவேண்டும்” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …