Tuesday , October 14 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தாழமுக்க அனர்த்தம்! சுழல்காற்றினால் உடைமைகள் சேதம்!

தாழமுக்க அனர்த்தம்! சுழல்காற்றினால் உடைமைகள் சேதம்!

தாழமுக்கம் காரணமாக தற்போது இலங்கையின் கரையோரப் பகுதிகளில், குறிப்பாக காலி, மாத்தறை, களுத்துறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பதுளை, நுவரெலிய பகுதியிலும் கடுமையான காற்றுடன் மழை பெய்து வருகிறது.

கொழும்பு, தெஹிவளை பகுதியிலும் கடுமையான காற்று வீசி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் வீதிகளில் மர முறிவு ஏற்பட்டதால் போக்குவரத்திலும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

கொழும்பில் டுப்ளிகேஷன் வீதியில் மரம் முறிந்து விழுந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மஹரகம, தெஹிவளை பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

அடுத்த 24 மணி நேரம் வரை குறித்த காலநிலை தொடருமென்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்றும் வானிலை அவதான மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …