சர்வதேச நீதிபதிகள் அவசியம் – இயக்குநர் எலைன் பியர்சன்
ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்கற்றங்கள் குறித்த விசாரணைகளின்போது சர்வதேச நீதிபதிகளை பயன்படுத்த வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அவுஸ்திரேலியாவிற்கான இயக்குநர் எலைன் பியர்சன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இலங்கயைானது ஐ.நா தீர்மானத்தின் தேசிய கூறுகளை நோக்கி முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
எனினும் நீதி வழங்கும் செயற்பாடுகளில் சர்வதேச பங்களிப்பை உள்ளடக்கும் விடயத்தில் முன்னேற்றம் ஏற்படாமை குறித்து சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கவலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
ஸ்ரீலங்கா அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், சர்வதேச பங்களிப்பை உள்வாங்குவதில் முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.
சர்வதேச பங்களிப்பை பிற்போடுவது அல்லது கைவிடு ஸ்ரீலங்காவின் உள்நாட்டு போரின்போது வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்றவர்கள் மீள வருவதைத் தடுக்கலாம்.
தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகளில் ஈடுபட்டவர்கள் ஸ்ரீலங்காவில் சுதந்திரமாக நடமாடும்போது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் ஏன் ஸ்ரீலங்கா திரும்ப எண்ண வேண்டும் என்பது யதார்த்தம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா அரசாங்கம் மிக மோசமான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும், சித்திரவதை காரணமாக வாக்குமூலம் அளித்த பலர் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் ஸ்ரீலங்கா அரசு இன்னமும் பயங்கரவாத தடைச்சட்டத்தை அகற்றவில்லை.
ஸ்ரீலங்காவில் நீதி விசாரணைகள் சுதந்திரமாகவும், பக்கச்சார்பற்றதாகவும், காணப்படுவதற்கு அவுஸ்திரேலியா தனது நீதிபதிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.