Tuesday , October 14 2025
Home / சினிமா செய்திகள் / மலையாள நடிகை பாலியல் வழக்கு போலீசார் குற்றபத்திரிகை தாக்கல் முன்னாள் மனைவி சாட்சியாக சேர்ப்பு

மலையாள நடிகை பாலியல் வழக்கு போலீசார் குற்றபத்திரிகை தாக்கல் முன்னாள் மனைவி சாட்சியாக சேர்ப்பு

மலையாள நடிகை பாலியல் வழக்கு விவகாரத்தில் போலீசார் அங்கமாலி கோர்ட்டில் குற்றபத்திரிகை தாக்கல் செய்துள்ளார்கள்.
கேரளாவில் கடந்த பிப்ரவரி 17 ந்தேதி நடிகை பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். கிட்டத்தட்ட 85 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நிலையில் ஜாமீனில் வெளிவந்துள்ளார் நடிகர் திலீப்.

இந்த வழக்கில் ஏப்ரல் 18 ல் தாக்கல் முதல் குற்றபத்திரிகையில் திலீப் 11 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். முதல் குற்றவாளியாக சுனில் என்கிற பல்சர் சுனி இருந்தார். துணை குற்றபத்திரிகையை இன்று அங்கமாலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

இதில் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்கபட்டு உள்ளார். மேலும் திலிபின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.

இந்த குற்றபத்திரிகையில் திலீப் 14 குற்றவாளிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். 385 சாட்சிகள் மற்றும் 12 ரகசிய அறிக்கைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. 50 சினிமா உலக பிரமுகர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கில் பல்சர் சுனி, விஜேஷ்,மணிகண்டன்,வடிவாள் சலீம்,மார்ட்டீன், பிரதீப், சார்லி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …