ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் எனும் ஆசை தனக்கு இருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் காலா திரைப்படம் அடுத்தாண்டுதான் திரைக்கு வரும் என படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் அறிவித்துள்ளார்.
சென்னையில் மும்பை தாராவி போன்ற அரங்கம் அமைத்து விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் எனும் ஆசையையும் தனுஷ் வெளிப்படுத்தியுள்ளார். காலாவிற்கு முன்பாக ஷங்கர், ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 திரைக்கு வரவுள்ளது.