Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / எமது இனத்துக்கான எதிர்கால அடையாளமாக கல்வி மாத்திரமே உள்ளது – பா.டெனிஸ்வரன்

எமது இனத்துக்கான எதிர்கால அடையாளமாக கல்வி மாத்திரமே உள்ளது – பா.டெனிஸ்வரன்

எமது இனத்துக்கான எதிர்கால அடையாளமாக கல்வி மாத்திரமே உள்ளது – பா.டெனிஸ்வரன்

எமது இனத்துக்கான எதிர்கால அடையாளமாக கல்வி மாத்திரமே உள்ளது. எனவே வறுமையை காரணமாக காட்டி கல்வியை இழந்துவிடக்கூடாது என்று வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட பேசாலை சென் மேரிஸ் வித்தியாலயத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட வடக்கு மாகாண அமைச்சர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டெனிஸ்வரன், வாழ்வில் எந்த ஒரு உயர்வான நிலைக்கு வந்தாலும் கடந்து வந்த பாதையில் எல்லா விடயங்களையும் அபிவிருத்தி செய்த ஏணிகளாக திகழ்ந்த பெற்றோரையும், ஆசிரியர்களையும் ஒருபோதும் மறந்துவிடக்கூடாதெனத் தெரிவித்தார்.

அத்துடன் மாணவர்கள் தமது கல்வியை பிரதானமாக கற்றுக்கொள்வதோடு சகல துறைகளிலும் சிறந்துவிளங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதேவேளை பாடசாலைகளை வலுவூட்டவும் மாணவர்களது கற்றல் நடவடிக்கைகளை ஸ்திரப்படுத்தும் நோக்கோடும், பாடசாலையின் பௌதீக வள மேம்பாட்டிற்குமென தனது 2017 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை ஒதுக்கி தருவதாக மாகாண அமைச்சர் டெனிஸ்வரன் இதன்போது உறுதியளித்தார்.

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறைவா, மன்னார் கோட்டக்கல்வி அதிகாரி டி.கிறிஸ்டிராஜா, பேசாலை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் ஈற்றன் பீரிஸ், மற்றும் பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …