திருமலையில் டெங்கு நோய் கோரத்தாண்டவம்! 6 வயது சிறுமி மரணம்!! – உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக உயர்வு
திருகோணமலையில் டெங்கு நோயால் 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லாரியின் தரம் 1 மாணவி அஞ்சனா உதயராஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.
டெங்கு நோய் கோரத்தாண்டவத்தால் திருகோணமலை மாவட்டம் டெங்கு அபாய வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது எனவும், நிலைமை மேலும் விபரீதமாகாமல் தடுப்பதற்கான சகல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக கொழும்பிலிருந்து வைத்திய நிபுணர்களின் குழுக்கள் திருகோணமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன எனவும் சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.

