Sunday , August 24 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / திருகோணமலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு 5 மில்லியன் நிதி ஒதுக்கீடு

திருகோணமலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு 5 மில்லியன் நிதி ஒதுக்கீடு

திருகோணமலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு 5 மில்லியன் நிதி ஒதுக்கீடு

திருகோணமலையில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையின் கிண்ணியா பிரதேசத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், குறித்த பிரதேசத்தில் நான்கு வைத்திய நிபுணர்களை உள்ளிடக்கிய 23 பேர் கொண்ட விசேட வைத்திய குழாம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த பகுதியில் டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் வகையில் கிழக்கு மாகாண சபை, சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் பாதுகாப்பு படையினர் ஒன்றிணைந்து விசேட சிரமதானப் பணிகளை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Tamil Technology News

 

Tamilnadu News

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …