இலங்கைக்கான கனடா நாட்டின் தூதுவார் டேவிட் மைக்கன் யாழ்ப்பாணத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் சுமார் 1 மணி நேரம் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண அபிவிருத்திகள் ,டொரான்டோ மாநிலத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் யாழ்.மாவட்ட அபிவிருத்தி உட்பட பல அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.