Wednesday , October 15 2025
Home / முக்கிய செய்திகள் / கடலுக்குச் செல்வது ஆபத்து!!

கடலுக்குச் செல்வது ஆபத்து!!

தெற்கு அந்­த­மான் தீவுப் பகு­தி­யில் – இலங்­கை­யி­லி­ருந்து ஆயி­ரத்து 300 கிலோ மீற்­றர் தொலை­வில் காற்­ற­ழுத்­தத் தாழ்வு நிலை நேற்று மாலை நிலை­கொண்­டிருந்­தது.

இது எதிர்­வ­ரும் மூன்று தினங்­க­ளுக்­குள் வங்­காள விரி­குடா வழி­யாக இந்­தி­யா­வின் தெற்கு ஆந்­தி­ரப் பிர­தே­சத்தை நோக்­கிச் செல்­லும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

நாட்­டில் குறிப்­பாக வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் காற்­றின் வேகம், மணித்­தி­யா­லத்­துக்கு 50 தொடக்­கம் 60 கிலோ மீற்­றர் வரை காணப்­ப­டும். கடல் பகு­தி­யில் காற்­றின் வேகம் மணிக்கு 60 தொடக்­கம் 70 கிலோ மீற்­றர் வரை காணப்­ப­டும்.

இந்­தக் கால­நிலை, மீன­வர்­கள் மீன்­பி­டிக்­கச் செல்­வ­தற்கு பாது­காப்­பா­னது அல்ல என்று வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளத்­தின் பணிப்­பா­ளர் எஸ்.பிரேம்­லால் தெரி­வித்­தார்.

தெற்கு அந்­த­மான் தீவு­க­ளில் உள்ள வலு­வான குறைந்த காற்­ற­ழுத்­தம் தீவி­ர­ம­டைந்து வரு­கின்­றது. இது எதிர்­வ­ரும் மூன்று தினங்­க­ளுள் இது வட­மேற்கு திசை­யில் நகர்ந்து, தெற்கு ஆந்­திரா, வட தமி­ழ­கக் கடற்­க­ரையை நோக்­கிச் செல்­லும். இலங்கை மற்­றும் இந்­தி­யக் கரை­யோ­ரப் பகு­தி­க­ளில் கடும் காற்று வீசக்­கூ­டும்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv