மட்டக்களப்பு ஆயித்தியமலை உன்னிச்சை சந்தியில் முதுமையிலும் துவிச்சக்கர வண்டி ஓட்டி தனது நாளாந்த கடமைகளை செய்யும் வீரத்தமிழ்த்தாய் ஒருவர் வாழ்ந்துவருகின்றார்.
வாழ்வில் முதுமை என்பது ஒரு தடையல்ல என உணர்த்துகின்றார் அந்த வீர வயோதிப தமிழ்த்தாய்.
தானே தனது கடமைகளை துவிச்சக்கர வண்டி ஓடி சாதிக்கின்றார்.
பொதுவாகவே வயோதிபம் தொடங்கினாலே நோய் எனும் உளநிலையை ஏற்படுத்தி மனம் பலவீனப்பட்டு மற்றவரின் ஆதரவை நாடி தங்கிவாழ்வது சாதரணமானவர்களின் மனநிலை.
ஆனால் இத்தாயின் நடவடிக்கை மட்டக்களப்பு தமிழரின் கிராமிய சூழலின் தன்னம்பிக்கை உலகிற்கு எடுத்து சொல்லி நிற்கின்றது என்றால் மிகையாகாது.