ஈரானில் கொரோனாவின் கோரதாண்டவம் 210 பேர் பலி
ஈரானில் கொரோனா வைரஸ் காரணமாக 210 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் டெஹ்ரான் மற்றும் குவாம் நகரங்களை சேர்ந்தவர்கள எனவும் பிபிசி தெரிவித்துள்ளது.
பல மருத்துவமனைகளை அடிப்படையாக வைத்து சேகரிக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் வியாழக்கிழமை இரவுவரை 210 பேர் வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்தவது என தெரியாத நிலையில் தடுமாறும் ஈரான் அரசாங்கம் உயிரிழந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த புள்ளவிபரங்களை மறைக்கின்றதா என்ற அச்சம் காணப்படுகின்றதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஈரானின் 22 நகரங்களில் வெள்ளிக்கிழமை தொழுகைள் இரத்துச்செய்யப்பட்டதுடன் பாடசாலைகள் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு காணப்பட்டதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது.
இதேவேளை ஈரானிய அதிகாரிகள் தாங்கள் வெளிப்படை தன்மையுடன் நடந்துகொள்வதாகதெரிவித்துள்ளதுடன் பிபிசி பொய்யான தகவல்களை பரப்புகின்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் இதுவரையில் 34 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதுடன் 388 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய எமது செய்திகளை சமூக ஊடகங்கள் வாயிளாக ஷேர் செய்யுங்கள்
எமது youtube சேனல்லில் இன்றே இணைத்திடுங்கள்
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
ஆறாவது பிரித்தானியர் கொரோனா வைரஸால் உயிரிழப்பு !
-
இதுவரை 60 நாடுகளுக்கு பரவிய கொரோனா… பீதியில் உலக மக்கள்!
-
கொரோனாவால் ஈரான் விமான சேவைகளை நிறுத்த இந்தியா முடிவு !
-
இத்தாலிய இலங்கையர்கள் தொடர்பில் வெளியான கொரோனா வைரஸ் அறிக்கை
-
பாரிஸின் கரே டி லியோன் புகையிரத நிலையத்தில் பாரிய தீ விபத்து
-
கொரோனா வைரஸ் உச்சம் – ஜப்பான், தென்கொரியா நாட்டவர்களுக்கு தடை விதித்த இந்தியா
-
கொரோனா வைரஸ் ஆபத்து நிலை உச்சம்… உலக சுகாதார நிறுவனம் அதிரடி தகவல்!
-
வவுனியாவில் வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டகாசம்!
-
இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இருவருக்கு கொரோனா அறிகுறி!
-
வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் பெண்களின் கனவுகளை கொலை செய்யும் பெற்றோர்கள்!
-
தமிழர் பகுதியில், உண்ண உணவில்லாமல் உயிரிழந்த அரசாங்க ஊழியர்!
-
கொரோனாவால் இலங்கை தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
-
மனித உரிமை மீறல், மற்றுமொரு விசாரணை – ஐ.நா கொடுத்த அதிர்ச்சி!