Tuesday , June 11 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கையில் மீண்டும் கொரோனா – 1,317 தொற்றாளர்கள் ஆக அதிகரிப்பு

இலங்கையில் மீண்டும் கொரோனா – 1,317 தொற்றாளர்கள் ஆக அதிகரிப்பு

இலங்கையில் மீண்டும் கொரோனா – 1,317 தொற்றாளர்கள் ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 39 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதுவரை மொத்தமாக 1,317 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம்  புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளான 135 பேர் இனங்காணப்பட்டனர்.

இன்று இனங்காணப்பட்ட 135 நோயாளர்களில் 127 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தோர் எனவும், 8 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கடற்படையினர் எனவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 712 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 595 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

76 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv