Saturday , August 23 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மன்னாரில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்?

மன்னாரில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்?

மன்னாரில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்?

கொரோனா வைரஸ் பரவிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் வைரஸ் தாக்கமுடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களிற்கான தனிமைப்படுத்தல் முகாமை மன்னாரில் அமைக்க முயற்சி நடப்பதாக வெளியாகும் தகவலையடுத்து, அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தமது பகுதியில் தனிமைப்படுத்தல் முகாமை அமைக்க வேண்டாமென மக்கள் அரசியல், மத பிரமுகர்களை தொடர்பு கொண்டு வலியுறுத்தி வருகிறார்கள்.

தற்போது செயற்படாமல் உள்ள மன்னார்-தலை மன்னார் பிரதான வீதியில் உள்ள ‘காமன்ஸ்’ கட்டிட தொகுதியில் குறித்த நபர்களை கொண்டு வந்து தனிமைப்படுத்தி வைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் மக்கள் மத்தியில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த இடத்தை இராணுவ அதிகாரிகள் ஆய்வு செய்ததுடன், முன்னாயத்த நடவடிக்கைகள் இடம்பெறுவதாக வெளியான தகவலையடுத்து மன்னார் மக்கள் அச்சசமடைந்த நிலையில் உள்ளனர்.

குறித்த ‘காமன்ஸ்’ ஐ அண்டிய பகுதியில் மக்கள் அதிகம் நெருக்கமாக வாழ்வதாகவும் குறித்த பகுதியில் பாதிக்கப்பட்ட நபர்களை கொண்டு வந்து தனிமைப்படுத்த வேண்டாம் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv