தமிழகத்தில் கொரோனா பாதிப்பினர் 1683 ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 54 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.