சிவில் பாதுகாப்பு பிரிவி னரால் வன்னிப் பிரதே சத்தில் இயக்கப்படும் முன் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் கட்டாய இராணுவப் பயிற்சியைப் பெற்றுக்கொள்ளுமாறு நிர்பந்திக்கப்படு கின்றனர்.
அவர்கள் தமது பணியிலிருந்து இதன் காரணமாக விலகுகின்றனர். இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.ஆர்னோல்ட் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட் டது. பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது.
விவாதத்தில் உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர் இ.ஆர்னோல்ட், வடக்கு மாகாணத்தில் போருக்குப் பின்னர் இராணுவத்தினர் சில இடங்களில் முன்பள்ளி களை நடத்தி வருகின்றனர்.
அந்த முன்பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாதாந்தம் சம்பளமாக 34 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. அவர்களுக்கு கடன் அடிப்படையில் உந்துருளி (மோட்டார் சைக்கிள்களும்) வழங்கப்பட்டுள்ளது.
இங்கு எமது பிள்ளைகள் இராணுவச் சீருடைகளுக்கு முன்னால் கல்வி கற்பதால் அவர்கள் மனதில் பல தாக்கங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இது மட்டுமன்றி இராணுவத்தினரின் முன்பள்ளியில் கற்பிக்கும் ஆசிரியர்களை கட்டாய இராணுவப் பயிற்சிக்கும் அழைத்துள்ளார்கள்.