Monday , June 17 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கொழும்பு தாமரை கோபுரத்தில் பிரமாண்ட வசதிகள்

கொழும்பு தாமரை கோபுரத்தில் பிரமாண்ட வசதிகள்

தெற்காசியாவிலேயே அதிக உயரமான கட்டடமாக நிர்மாணிக்கப்பட்டுவரும், கொழும்பு தாமரை கோபுரத்தில் பிரமாண்ட வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கோபுரத்தில் இருந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் வானொலி ஒலிபரப்புகள் சேவைகள் என்பன தொழிற்படவுள்ளதோடு, இதன் மூலம் சகலரும் தரம் வாய்ந்த ஒலி மற்றும் ஒளிபரப்புகளை பெறமுடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கோபுரத்தில் பல விற்பனை அங்காடிகள், விருந்தகங்கள், அரும்பொருட்காட்சி சாலைகள், தலா 450 பேர் அமரக்கூடிய விருந்தகங்களும் உள்ளடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரச விருந்தினர்கள் தங்கக்கூடிய நவீன வசதிகளைக் கொண்ட விருந்தகங்களும் இந்தக் கோபுரத்தில் அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நிறைவடையும் எனவும் உத்தியோகபூர்வ திறப்பு நிகழ்வு இந்த வருட இறுதியில் இடம்பெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …