கருணாவை சிஐடியினர் விசாரணைக்கு அழைப்பு
போரில் இராணுவத்தினரை கொலை செய்தமை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு கருணா எனும் வி.முரளிதரனுக்கு சிஐடியினர் இன்று (22) அழைப்பு விடுத்துள்ளனர்.
எனினும் எப்போது ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டவில்லை என கருணா தெரிவித்துள்ளார்.
“புலிகளுடன் இருந்த போது ஆணையிறவு மோதலில் 3000 இராணுவ வீரர்களை கொன்றதாக அண்மையில் அவர் தெரிவித்த கருத்து தொடர்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருந்தது.’
இந்நிலையில் அது குறித்து உடனடியாக விசாரணை செய்ய சிஐடிக்கு பதில் பொலிஸ்மா அதிபர் இன்று காலை உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பயனுள்ள இணைப்புகள் இங்கே




