Sunday , November 17 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / கொரோனாவை பரப்பியது அமெரிக்கா என சீனா குற்றம் சுமத்தியுள்ளது!

கொரோனாவை பரப்பியது அமெரிக்கா என சீனா குற்றம் சுமத்தியுள்ளது!

கொரோனாவை பரப்பியது அமெரிக்கா என சீனா குற்றம் சுமத்தியுள்ளது!

கொரோனா வைரஸ்ஸின் மையப்புள்ளியான சீனாவின் வூகானில் கொரோனாவை அமெரிக்க ராணுவத்தினர் பரப்பி இருக்கலாம் என சீனா பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சீன வெளியுறவுத்துறை இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக தெரிவித்துள்ளது .

இந்நிலையில் சீனாவின் இந்த புதிய குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி பல நாடுகளில் இந்த வைரஸ் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது .

இந்நிலையில் இந்த வைரசுக்கு இதுவரையில் மருந்து கண்டுபிடிக்கப்படாததால் இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மனித குலத்தின் கொடிய எதிரியாக கருதப்படும் கொரோனா, சீனா பயோவார் முயற்சியில் ஈடுபட்ட போது தவறுதலாக வெளியான வைரஸ் கிருமிதான் கொரோனா என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாமீது குற்றம் சுமத்தியிருந்தன.

ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்த சீனா முதலில் இந்த வைரஸ் பாம்புகள் , மற்றும் எறும்புத்தின்னி போன்ற உயிரினங்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது என கூறியது. ஆனால் தற்போது இந்த வைரஸ் பரவலுக்கு புதிய காரணத்தை சீனா தெரிவித்துள்ளது. அதாவது சீனாவுக்குள் அமெரிக்க ராணுவம்தான் கொரோனா வைரசை பரப்பி இருக்கலாம் என அந்நாட்டு அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார் . எனினும் எவ்வித ஆதாரமும் இல்லாமல் அமெரிக்கா மீது குற்றச்சாட்டை சீன அதிகாரி முன்வைத்துள்ளார் .

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஸோ லிஜியான்,

சீனாவிலுள்ள சமூக வலைதளங்களில் இது போன்ற குற்றச்சாட்டுகள் ஏற்கனவே பரவி வந்த நிலையில் அமெரிக்க ராணுவம் தான் கொரோனாவை கொண்டுவந்திருக்கும் என அத்துடன் அமெரிக்காவில் கொரோனாவுக்கு எத்தனைபேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர் என கேள்வி எழுப்பியுள்ள அவர், இதில் வெளிப்படையாக இருங்கள் , உங்கள் தகவல்களை வெளிஉலகிற்கு தெரிவியுங்கள் , அமெரிக்கா இதுகுறித்து நிச்சயம் விளக்கம் அளிக்கவேண்டும் என கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து ஆயிரத்தை நெருங்கி உள்ளது. 1.30 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படியொரு குற்றச்சாட்டை சீனா வைத்துள்ளது.

இதேவேளை இந்த குற்றச்சாட்டை அமெரிக்காவின் பாதுகாப்பு அலோசகர் முற்றிலுமாக மறுத்துள்ளதுடன், இந்த வைரஸ சீனாவில் இருந்துதான் பரவியதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv