தென்கொரியாவுக்கு கொரோனாவை கட்டுபடுத்த உதவிய சீனா…!
கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள தென்கொரியாவுக்கு 5 லட்சம் மாஸ்குகளை வழங்கி சீனா உதவியுள்ளது.
சீனாவிலிருந்து பரவத்துவங்கிய கொரானா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ள நிலையில், அதன் அண்டை நாடான தென் கொரியாவும் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளது.
அங்கு திங்கட்கிழமை அன்று வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 476 பேரை சேர்த்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,212 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தென் கொரியாவின் டேய்கு பகுதிக்கு, சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து 5 லட்சம் முகமூடிகள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
வைரஸ் பரவத் தொடங்கிய சமயத்தில் சீனாவுக்கு பல்வேறு மருத்துவ உதவிகளை செய்த தென் கொரியாவுக்கு தற்போது சீனா உதவியுள்ளது.