கட்சி பேதங்கள் பாராது நாட்டுக்காக பணிபுரியக்கூடியவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
வேயங்கொடையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இதனை தெரவித்தார்.
கட்சியில் தவறிழைத்தவர்களை நீக்கிவிட்டு புதியவர்களை இணைத்துக்கொண்டே நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிக்காகவன்றி நாட்டுக்காக முன்னிலையாகும் எவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
தேசத்திற்காக தொலைநோக்குடன் செயற்படக் கூடிய அரசியல் தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும் என சந்திரிக்கா பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.