போர்த்துக்கேயர் காலம் தொடக்கம் சைவர்களையும் பௌத்தர்களையும் மோத விடும் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறதாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். இந்த சூழ்ச்சியில் கத்தோலிக்கர் காலம் காலமாக இலங்கையில் செயற்பட்டு வந்தனர் என்பதைச் செல்வம் அடைக்கலநாதன் இந்தத் தலைமுறையிலும் எடுத்துக்காட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அறிக்கை ஒன்றின் ஊடாகவே அவர் இதனை கூறியுள்ளார். கன்னியா மற்றும் செம்மலை நீராவியடி புத்தர் சிலைகளை ஆக்கிரமிப்புகளை அகற்ற நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய இரத்தின தேரர் …
Read More »விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!
கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக கிளிநொச்சியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோத்தர்கள் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்துடன் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக ஆரம்பமான கண்டன ஆர்ப்பாட்டம் பின்னர் மாவட்டச் செயலகம் வரை சென்று மாவட்ட அரச அதிபருக்கான மகஜர் மேலதிக மாவட்ட அரச அதிபரிடம் …
Read More »செவ்வாய்கிழமை என்பதில் ரணிலுக்கு குழப்பம்
கல்முனை பிரதேசசெயலகத்தை தரமுயர்த்தும் அமைச்சரவை பத்திரத்தை செவ்வாய்க்கிழமை சமர்ப்பிப்பதாக பிரதமர் சொல்லியுள்ளார். ஆனால், எந்த செவ்வாய்கிழமை என்பதில் அவருக்கும் குழப்பம் உள்ளது. வாக்குறுதி வழங்குவதில் ரணில் விக்கிரமசிங்க வல்லவர் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி, பா.அரியநேந்திரன். கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த கோரி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கல்முனை தமிழ் …
Read More »நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடிக்கும்
கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்த்தல் குறித்து உரிய தீர்வினை அரசாங்கம் வழங்காவிடின், நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடிக்குமென முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தார். இந்த கோரியை முன்னெடுத்து வரும் மதகுருமார்களினால் மேற்கொள்ளப்பட்டும் உண்ணாவிரதப் போராட்டக் களத்திற்குச் நேற்று சென்ற அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “இந்த பிரச்சினை …
Read More »தற்கொலை தாக்குதல் தொடர்பில் ரஸ்யா வெளியிட்ட புதிய தகவல்
சிரியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் செயற்பட்ட ஐ.எஸ். உறுப்பினர்களே இலங்கையில் குண்டுவெடிப்புக்களை திட்டமிட்டார்கள் என ரஸ்ய பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளர் யூரிகொகோவ் தெரிவித்துள்ளார். சர்வதேச கூட்டம் ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள ஐ.எஸ் கட்டமைப்புகளை அடிப்படையாக கொண்டு இலங்கையில் உள்ள சர்வதேச ஜிகாத்தின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதல்களை திட்டமிட்டுள்ளனர் என நிபுணர்கள் கருதுகின்றனர் என அவர் …
Read More »இன்றைய ராசிபலன் 20.06.2019
மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். அவசரத்திற்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித்தருவீர்கள். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் …
Read More »அமைச்சர்களுடன் முக்கிய கலந்துரையாடலில் பிரதமர் ரணில்
நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட கூட்டம் நடைபெற்றுவருகின்றது. அலரிமாளிகையில் இடம்பெறும் இக்கூட்டத்தில் அமைச்சர்களான மங்கள சமரவீர, எரான் விக்ரமரத்ன, ஹர்ஷ டி சில்வா, திலக் மாரப்பன மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இதன்போது நாட்டில் நிலவும் தற்போதைய நிலை மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள் குறித்தும் கலந்துரையாடப்படுகின்றன. இந்த சந்திப்பிற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் …
Read More »இருதரப்பு ஆறாம் கட்டபேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து புதிய கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் பேச்சு நடத்திவருகின்றது. குறித்த விடம் தொடர்பில் ஐந்து கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்த நிலையில் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெறவிருந்த இந்தப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இருதரப்பினரும் …
Read More »யாழ். பல்கலைக்கழகதிற்கு அதிகளவான முஸ்லீம்கள் விண்ணப்பம்
யாழ் பல்கலைக்கழகத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கிடைத்துள்ள 454 விண்ணப்பங்களில் 137 விண்ணப்ப படிவங்கள் முஸ்லீம்களின் விண்ணப்ப படிவங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பல்கலைக் கழகத்தில் நீண்டகாலமாக காணப்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் பிரகாரம் குறித்த வெற்றிடங்களிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களால் பரிந்துரைக்கக்படும் விண்ணப்பதாரிகளை நேர்முகத் தேர்விற்கு உட்படுத்தி அவர்களில் தகுதியானவர்களை நியமிக்க முடியும் என்பது விதிமுறை. அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களால் சிபார்சு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் நேரடியாக …
Read More »மீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா!
தற்போதைய ஜனாதிபதியின் ஆதரவாளராக தான் செயற்பட்டவர் என்றும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் எப்போதும் தான் மகிந்த ராஜபக்ஸவின் ஆதரவாக தான் செற்பட்டதாகவும், ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். அவ்வாறு பார்க்கப்போனால் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஹிஸ்புல்லா எவ்வளவு சாதுரியமாக ஏமாற்றியுள்ளார் என்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. அவரது சகல சக்தியையும் பாவித்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று செயற்பட்டவர்தான் ஹிஸ்புல்லா. பின்னர் நடைபெற்ற …
Read More »