சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளதையடுத்து சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வர்) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கூவத்தூரில் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய சசிகலா எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை முன் மொழிந்தார். இதையடுத்து அவரை எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். முன்னதாக செங்கோட்டையன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் …
Read More »தமிழக ஆளுநரின் முடிவுக்கு பின்னணியில் யாரும் இல்லை – வெங்கய்ய நாயுடு
தமிழக ஆளுநரின் முடிவுக்கு பின்னணியில் யாரும் இல்லை – வெங்கய்ய நாயுடு தமிழக முதல்வராக வி.கே. சசிகலாவை அழைக்க, ஆளுநர் வித்யாசாகர் ராவ் காலம் எடுத்துக் கொண்டதில் எந்த உள் நோக்கமும் இல்லை என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். தமிழக ஆளுநரின் முடிவுக்கு பின்னணியில் யாரும் இல்லை என்றும், தமிழக முதல்வர் பதவி காலியாக இல்லை ஒரு முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் …
Read More »சி.வி. தலைமையில் எழுக தமிழ் பேரணி ஆரம்பம்
சி.வி. தலைமையில் எழுக தமிழ் பேரணி ஆரம்பம் காலம் காலமாக தீர்க்கப்படாதுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இணைந்த வடகிழக்கே தீர்வு என்பதையும், சமஷ்டியின் மூலமே தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்பதையும் வலியுறுத்தி கிழக்கு எழுக தமிழ் பேரணி தற்போது எழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது. மட்டக்களப்பு கல்லடி மணிக்கூண்டு கோபுரம் அருகிலிருந்து பேரணி ஆரம்பமாகவுள்ள நிலையில், இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பலர் …
Read More »எனக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு பெரும்பான்மையை தமிழக சட்டசபையில் நிரூபிப்பேன்: ஓ.பி.எஸ்.
எனக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு பெரும்பான்மையை தமிழக சட்டசபையில் நிரூபிப்பேன்: ஓ.பி.எஸ். முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதாவது: எனக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு என்பதை சட்டசபையில் நிருபிப்பேன். ஜெயலலிதா கொள்கையில் சிறிதளவு கூட விலகாமல் வந்துள்ளேன். முறைப்படி தேர்தல் நடத்தி பொது செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்பது விதி. தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிப்பேன். கவர்னர் சென்னை திரும்பியதும் அவரை சந்திப்பேன். சசிகலா தற்காலிக பொது செயலாளர் தான். இவ்வாறு …
Read More »ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை பரிந்துரையை நிராகரியுங்கள் : சர்வதேச மனித உரிமை அமைப்பு
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை பரிந்துரையை நிராகரியுங்கள் : சர்வதேச மனித உரிமை அமைப்பு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை ஸ்ரீலங்காவுக்கு வழங்க வேண்டும் என்ற ஐரோப்பிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, ஐரோப்பிய நாடாளுமன்றம் நிராகரிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. ஸ்ரீலங்காவில் உண்மை மற்றும் நீதிக்கான திட்டம், சித்திரவதையில் இருந்து விடுதலை, சமாதானம் மற்றும் நீதிக்கான ஸ்ரீலங்காவின் பரப்புரை அமைப்பு உள்ளிட்ட பல …
Read More »சசிகலாவுக்கு பேரிடி – சொத்து குவிப்பு வழக்கில் ஒருவாரத்தில் தீர்ப்பு
சசிகலாவுக்கு பேரிடி – சொத்து குவிப்பு வழக்கில் ஒருவாரத்தில் தீர்ப்பு முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்துவிட துடித்துக் கொண்டிருக்கும் சசிகலாவுக்கு பேரிடியாக சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையானதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதி முதல்வர் பதவியில் உட்கார்ந்துவிட தயாராகிவிட்ட சசிகலாவுக்கு டெல்லியில் இருந்து இன்று வந்துள்ள செய்தி பேரிடியாகத்தான் இருக்கும். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்த மேல்முறையீட்டு …
Read More »ஊழல் வேண்டுமா அல்லது வளர்ச்சி வேண்டுமா? மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் – பிரதமர் மோடி
ஊழல் வேண்டுமா அல்லது வளர்ச்சி வேண்டுமா? மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் – பிரதமர் மோடி ஓட்டளிக்கும் முன்னர், ஊழல் வேண்டுமா அல்லது வளர்ச்சி வேண்டுமா என்பது குறித்து மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார். ஊழலுக்கு எதிராக…: உ.பி., சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து மீரட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், வறுமை,ஊழலை முடிவுக்கு கொண்டு வரவே நமது போராட்டம் …
Read More »சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே தீர்வு கிடைக்க வேண்டும்: முஸ்லிம் காங்கிரஸ்
சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே தீர்வு கிடைக்க வேண்டும்: முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அபிலாஷையாகும் என கிழக்கு முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) ஏறாவூரில் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொண்டு உரையாற்றிய கிழக்கு முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து …
Read More »சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க போவதாக கோப்பாப்பிலவு மக்கள் எச்சரிக்கை
சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க போவதாக கோப்பாப்பிலவு மக்கள் எச்சரிக்கை தமது சொந்த காணியில் தங்களை மீள்குடியேற்றாத பட்சத்தில் நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோப்பாப்பிலவு குடியிருப்பு மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தங்களது காணிகள் விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்காகமான முடிவினை எடுக்க வேண்டும் எனவும் அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபுலவு …
Read More »வடமாகாண சபையின் கிளிநொச்சி கட்டிடம் ஊடக விபசாரிகளுக்கு பதிலடி
வடமாகாண சபையின் கிளிநொச்சி கட்டிடம் ஊடக விபசாரிகளுக்கு பதிலடி ஊடக விபசாரங்களை நடத்துகின்றவர்களுக்கு பாடம் புகட்டும் முகமாகவே வடமாகாண சபை, கல்வியை வளர்த்துச் செல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டார். வடமாகாண சபை பல கட்டிடங்களைக் கட்டுவதாகவும், கல்வியை வளர்த்துச் செல்வதாகவும் குறிப்பிட்ட அவர், ஒரு நவீன காலத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் …
Read More »