Thursday , March 28 2024
Home / முக்கிய செய்திகள் (page 450)

முக்கிய செய்திகள்

Head News

நடிகர் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து – எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் வேண்டுகோள்

நடிகர் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து

நடிகர் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து – எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் வேண்டுகோள் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ள ரஜினிகாந்த், நான் ஒரு கலைஞன், என் முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு வழங்க இருந்தார். இந்நிலையில், அவர் இலங்கைக்கு செல்லக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் …

Read More »

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது – சுஸ்மா ஸ்வராஜ்

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின்போது இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் இந்தியா கவலையடைந்திருந்தாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் நேற்று நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார். இலங்கை தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன்களை பாதுகாப்பதே, எமது நோக்கம். இதனை கட்டாயப்படுத்தி அல்லது, நட்பு நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு என இரண்டு வழிகளில் அடைய முடியும். இந்தப் பிரச்சினை எழுந்து கொண்டிருக்கும் போது, ஒருமித்த நிலையை …

Read More »

ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துக! – அரசை வலியுறுத்துகின்றது கூட்டமைப்பு

“ஐ.நா. தீர்மானங்களின் உள்ளடக்கங்களை அவற்றில் உள்ளவாறே இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. “தமிழ் மக்கள் தமது பொறுமையின் எல்லையை அடைந்துவிட்டார்கள். எனவே, அவர்களது இடர்களுக்கும், வேதனைகளுக்கும் கூடிய விரைவிலே ஒரு முடிவு காணப்படவேண்டும்” என்றும் கூட்டமைப்பு கோரியுள்ளது. 2015ஆம் ஆண்டின் ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தும் புதிய தீர்மானம் வாக்கெடுப்பின்றி – ஏகமனதாக வியாழக்கிழமை …

Read More »

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து கடும் வேதனையில் இந்தியா! – சுஷ்மா அதிரடி

இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதியில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் இந்திய அரசு கடும் வேதனையும் துயரமும் அடைந்தது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்தக் கருத்து வழமைக்கு மாறானது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தியா இதுவரை வெளியிட்ட கருத்துக்களில் இதுவே கடுமையானது என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் …

Read More »

இராணுவத்தை விசாரணை செய்ய ஒருபோதும் அனுமதியோம்

இராணுவத்தினரை விசாரணை செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவது இல்லை என்று மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மெகா பொலிஸ் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மெகா பொலிஸ் அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். எங்கள் முடிவில் தெளிவாக இருகக்கின்றோம். எமது நீதித்துறை எமக்கு போதுமானது. இந்த நாட்டில் நடைபெற்றதாக கூறப்படும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை …

Read More »

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அ.தி.மு.க. இரண்டாக உடைந்து சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு ஏப்ரல் 12–ந் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள். இதனால் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும்? என்ற கேள்வி …

Read More »

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம்: தப்பிவிட முடியாது கோட்டா! – அடித்துக் கூறுகின்றார் சுமந்திரன்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம்: தப்பிவிட முடியாது கோட்டா! - அடித்துக் கூறுகின்றார் சுமந்திரன்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம்: தப்பிவிட முடியாது கோட்டா! – அடித்துக் கூறுகின்றார் சுமந்திரன் “இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் – சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் பொறுப்புக்கூறவேண்டியவர். அதிலிருந்து தப்பிப்பதற்காகவே சரணடைந்தவர்களைக் கண்டவர்கள் எவருமில்லை என்று கதை சொல்கின்றார்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போரின் இறுதிக்கட்டத்தில் …

Read More »

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படுமா? மங்கள சமரவீர

இலங்கைக்கு கால அவகாசம்

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படுமா? மங்கள சமரவீர இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க பொறிமுறைகள் மற்றும் அதில் காணப்படும் தடைகள், முட்டுக்கட்டைகள் என்பன தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைனிடம் விளக்கிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நல்லிணக்க செயற்பாடுகளை மேலும் முன்னேற்ற காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என கோரியுள்ளார். ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜெனிவா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர், …

Read More »

உள்ளாட்சி தேர்தல் வரும் என எதிர்பார்த்தது… சட்டசபை தேர்தலே வரப் போகுது – திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

மக்களை பாதுகாக்கும் நல்லாட்சி

உள்ளாட்சி தேர்தல் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் சட்டசபை தேர்தலே வரும் நிலை ஏற்பட்டுள்ளது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அற்ப ஆயுள் அரசு : கோவை மாவட்டம் சூலூரில் திமுக.,வின் மாநில, மாவட்ட, மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், தற்போதுள்ள நிலையில் தமிழகத்தில் இடைக்கால அரசே உள்ளது. இது நிலையான அரசு கிடையாது. இவர்களுக்கு …

Read More »

நீதிமன்றத்தில் சரணடைய புறப்பட்ட சசிகலா பெங்களூரு செல்லும் முன் ஜெயலலிதா சமாதியில் கையால் அடித்து சபதம்

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு தண்டைனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் சரணடைய புறப்பட்ட சசிகலா பெங்களூரு செல்லும் முன் ஜெயலலிதா சமாதியில் இருமுறை கையால் அடுத்து சபதம் செய்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய போயஸ் கார்டனில் இருந்து சசிகலா புறப்பட்டார். சாலை மார்க்கமாக பெங்களூரு செல்லும் சசிகலா முன்னதாக ஜெயலலிதா …

Read More »