இராணுவத்தினருக்கு முழு அதிகாரம் வழங்கப்படும்- மகிந்த நாட்டில் முஸ்லீம் தீவிரவாதத்தை அடியோடு இல்லாதொழிப்பதற்கு இராணுவத்தினருக்கு முழுமையான ஒத்துழைப்பும், பூரண அதிகாரமும் வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்துள்ளார். பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் இராணுவ கல்லூரி பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு வழங்கும் நிகழ்வு இன்று தாமரை தடாக கலையரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே அவர்இதனை தெரிவித்துள்ளார். விடுதலை புலிகள் அமைப்பினை முழுமையாக இல்லாதொழித்த …
Read More »சிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும்
சிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும் இறையாண்மை கொண்ட நாடு என்ற சிறிலங்காவின் அடையாளத்தை இந்தியாவும் சீனாவும், மதிக்க வேண்டும் என சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தமது கீச்சகப் பதிவு ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அதில் அவர், “ இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட உலகளாவிய சக்திகளை- உங்கள் நம்பிக்கையை வைத்து, எங்கள் எதிர்காலத்தில் முதலீடு செய்ய அழைக்கிறேன். அதேவேளை, …
Read More »தமிழர் பகுதியில் ஆபத்தான நிலையில் மக்கள்!
தமிழர் பகுதியில் ஆபத்தான நிலையில் மக்கள்! கிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன. கிளிநொச்சி இரத்தினபுரம், ஆனந்தபுரம், சிவபுரம், பன்னங்கண்டி,கிளிநகர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன. கனகாம்பிகை குளம் இரண்டு அடி வான்பாய்வதனால் மேற்படி வெள்ளப்பாதிப்புகள் அதிகரித்துள்ளன. நேற்றிரவு (வியாழன்) வெள்ளம் மக்கள் குடியிருப்புக்குள் சென்றதன் காரணமாக மக்கள் கடும் நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக …
Read More »கரு ஜயசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்து
கரு ஜயசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்து ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவர் என்ற ரீதியில் சபாநாயகர் கருஜயசூரிய உடன் பதவிலியிருந்து விலகுவதே சிறப்பாக இருக்கும் என வீதி, பெருந்தெருக்கள் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “நாட்டு மக்கள் தீர்ப்பொன்றை வழங்கியிருக்கிறார்கள். அந்த முடிவினை பிரதேச சபை தேர்தலின்போதே வழங்கினார்கள். மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் அந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். இது …
Read More »அரிசி வகைகளின் விலைகளில் மாற்றம்
அரிசி வகைகளின் விலைகளில் மாற்றம் அரிசி வகைகள் சிலவற்றின் விலைகள் அதிகரித்து உள்ளதாக நுகர்வோர் நலன் புரி சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டரிசி மற்றும் வெள்ளை அரிசி , பச்சை அரிசி ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அந்த அரிசி வகைகளின் விலைகள் அதிகரித்து உள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. சந்தையில் இவ் வகை அரிசுக்கு தட்டுபாடு நிலவுவதால் அரிசி வகைகளை பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் நலன்புரி …
Read More »யாழில் மீண்டும் ரவுடிகள் குழு அட்டகாசம்!
யாழில் மீண்டும் ரவுடிகள் குழு அட்டகாசம்! யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் கேமி குழுத் தலைவரின் சகோதரன் வாளால் தாக்கப்பட்டுள்ளநிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கேமி குழுத் தலைவரின் சகோதரரான 26 வயதான அஜித் என்ற இளைஞரே இவ்வாறு வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த இளைஞன் இன்று காலை கல்வியங்காடு பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறமாக உள்ள வாய்க்கால் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். வெட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவர் …
Read More »கோட்டாபயவை கொலை செய்ய சதித்திட்டம்? ஐவர் கைது
கோட்டாபயவை கொலை செய்ய சதித்திட்டம்? ஐவர் கைது கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று பரபரப்பு செய்தி ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதில், கட்டுநாயக்க பகுதியில் வைத்து ஜனாதிபதி கோட்டாபயவை படுகொலை செய்ய முயற்சித்தார்கள் எனத் தெரிவித்து வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் உட்பட ஐவர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. …
Read More »கோட்டாபயவுடன் மேலும் இரு நாடுகள் கைகோர்ப்பு
கோட்டாபயவுடன் மேலும் இரு நாடுகள் கைகோர்ப்பு இலங்கையின் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் நியூஸிலாந்து நாடுகள் உறுதியளித்துள்ளன. இதன்படி, இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அஹமட் அல் முஅல்லா (Ahmad Al Mualla) இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார். ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தி எதிர்காலத்தில் மிகுந்த ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு …
Read More »பதவியை இராஜினாமா செய்யும் மகிந்த!
பதவியை இராஜினாமா செய்யும் மகிந்த! தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ள நிலையில், தனது இராஜினாமா கடிததத்தை , ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார். மாகாண சபைத் தேர்தல்கள் நடத்துவதற்கு தாமதமாகியுள்ளமையால், இந்த தீர்மானத்தை தான் எடுத்ததாக, மஹிந்த தேசப்பிரிய தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாக உள்ள நிலையில், அதனடிப்படையில், மஹிந்த தேசப்பிரிய …
Read More »மைத்திரிபால தொடந்தும் இருப்பார்
மைத்திரிபால தொடந்தும் இருப்பார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலில் தொடர்ந்திருப்பார் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். அத்துடன் சுதந்திரக்கட்சியின் தலைவராக மைத்திரிபால இருந்து, அரசியல் பணிகளை முன்னெடுப்பார் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தாம் பெற்றுக்கொண்ட புதிய வெற்றியை, மேலும் அர்த்தப்படும் வகையில் முன்னோக்கிக் கொண்டுசெல்வோம் எனவும் கட்சியின் உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கூறியுள்ளார். …
Read More »