Wednesday , March 27 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கோட்டாபயவுடன் மேலும் இரு நாடுகள் கைகோர்ப்பு

கோட்டாபயவுடன் மேலும் இரு நாடுகள் கைகோர்ப்பு

கோட்டாபயவுடன் மேலும் இரு நாடுகள் கைகோர்ப்பு

இலங்கையின் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் நியூஸிலாந்து நாடுகள் உறுதியளித்துள்ளன.

இதன்படி, இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அஹமட் அல் முஅல்லா (Ahmad Al Mualla) இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தி எதிர்காலத்தில் மிகுந்த ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாக உறுதியளித்தார்.

மேலும் ஜனாதிபதி கோட்டாபயவின் புதிய தொலைநோக்குடனான நிகழ்ச்சித் திட்டங்களை பாராட்டிய தூதுவர், அதனை வெற்றிபெறச் செய்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

இதேநேரம் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஜோன்னா கேம்பர்ஸ் (Joanna Kempkers) உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து, தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தி, பரஸ்பர நன்மைகளை அதிகரிப்பதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாக இதன்போது அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

Check Also

வீடு தேடி வருகிறது..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை CCTV கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் …