Monday , October 20 2025
Home / செய்திகள் (page 479)

செய்திகள்

News

மதுசூதனன் வெற்றி உறுதி: ஓ.பி.எஸ்.

சசிகலா பொதுச் செயலாளர் பதவி தேர்தல் - ஓ.பி.எஸ். அணி

ஆர்.கே. நகரில் மதுசூதனன் வெற்றி உறுதியாகி உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அளித்த பேட்டி: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் மகத்தான வெற்றி பெறுவார். தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம். தேர்தலை ஆணையம் முறையாக நடத்த வேண்டும். இரட்டை மின்விளக்கில் ஒரு விளக்கு எம்ஜிஆர். மற்றொன்று ஜெயலலிதா. …

Read More »

ராம்ஜெத்மலானி கேரள மருத்துவமனையில் திடீர் அனுமதி!

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கேரளாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராம் ஜெத்மலானிக்கு (94) இன்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மதியம் 12.45 மணிக்கு கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More »

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்த இந்திய மீனவர்கள் 12 பேர்  இரவு நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் புதுக்கோட்டை பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இவர்கள் பயன்படுத்திய இரண்டு விசைப் படகுகள் மற்றும் ஏனைய மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Read More »

தமிழ் உறவுகளின் கண்ணீருக்கு நீதி கிடைக்கவேண்டும்! – யாழில் தெரிவித்தார் சந்திரிகா

“தமிழ் மக்களில் சிலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கே என்று அவர்களின் உறவுகள் கதறுகின்றார்கள். எனவே, இந்த உறவுகளின் கண்ணீருக்கு நீதி கிடைக்கவேண்டும். அதேவேளை, பொதுமக்களைக் காரணமின்றிக் கொன்றவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். குற்றவாளிகளுக்குத் தண்டனை அவசியம்.” – இவ்வாறு யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா, யாழ்ப்பாணத்துக்கு விஐயம் மேற்கொண்டு, பல்வேறு …

Read More »

சர்வதேச விசாரணைக்கு சூத்திரதாரி மஹிந்தவே! – பான் கீ மூனை அழைத்துவந்து இணங்கியவர் அவரே என்கிறார் பொன்சேகா

“போர் முடிந்த சூட்டோடு முன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி – மூனை இலங்கைக்கு அழைத்து போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த இணங்கிய மஹிந்த, இராணுவத்தைக் காட்டிக் கொடுப்பதாக இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்.” – இவ்வாறு அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். களனிப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:- …

Read More »

கலப்பு நீதிமன்றம் தொடர்பில் ஐ.நாவில் மறுக்கவில்லை அரசு! – வாசு குற்றச்சாட்டு

“கலப்பு நீதிமன்றத்தையும் வெளிநாட்டு நீதிபதிகளையும் ஏற்கப்போவதில்லை என்று அரசு ஒருபோதும் ஜெனிவாவில் கூறவில்லை. இங்கு மாத்திரமே இவ்வாறான கருத்துக்களை அரசு வெளியிடுகின்றது. தேசிய அரசின் இரட்டை முகத்தை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “அமெரிக்கா …

Read More »

முழுமையான தீர்வை தமிழருக்குத் தராது தென்னிலங்கை! – தமிழ் – முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும் என்கிறார் ஹரீஸ்

“தமிழர்களுக்கு முழுமையான தீர்வை தென்னிலங்கை தரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதீத நம்பிக்கையில் இருக்கின்றது. கூட்டமைப்பின் நம்பிக்கையைப் பொய்யாக்கும் வகையில்தான் புதிய அரசமைப்பில் அதிகாரப் பரவலாக்கல் கிடைக்கும். எனவே, முழுமையான தீர்வைப்பெற தமிழ்பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் – முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறைப் பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் …

Read More »

ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கு அதியுச்ச அதிகாரம்! – கூறுகின்றார் அஜித் பெரேரா

“சமஷ்டிதான் தேவை என்று தமிழர்கள் பிடிவாதமாக இருக்கத் தேவையில்லை. அவர்கள் முழுமையாகத் திருப்தியடையும் வகையில் ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரம் வழங்கப்படும் என்று பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் தேசிய பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வை வழங்கும் நோக்கிலேயே புதிய அரசமைப்பு கொண்டுவரப்படவுள்ளது. மக்கள் இணங்க முடியாத எதுவும் அதில் இருக்காது. நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அதை …

Read More »

ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற தந்திரோபாய நகர்வு தேவை! – இலங்கையை வலியுறுத்துகின்றது பிரிட்டன்

“ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கான கால எல்லையுடனான தந்திரோபாயத்தை இலங்கை உருவாக்க வேண்டும்.” – இவ்வாறு பிரிட்டன் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பிரதி அமைச்சர் ஜொய்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “இலங்கையில் ஆயுத மோதல்களின் பாரம்பரியத்துக்குத் தீர்வைக் காண்பதற்காக இன்னமும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பல …

Read More »

மத்திய பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட கேரள கன்னியாஸ்திரிக்கு அருளாளர் பட்டம் – போப் பிரான்சிஸ் ஒப்புதல்

மத்திய பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட கேரள கன்னியாஸ்திரிக்கு அருளாளர் பட்டம் வழங்க போப் பிரான்சிஸ் ஒப்புதல் அளித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சிக்கு அருகிலுள்ள புல்லுவழி என்ற ஊரில் 1954-ம் ஆண்டு பிறந்தவர் ராணி மரியா. இவர் 1972-ல் கிடங்கூரில் உள்ள பிரான்சிஸ்கன் கிளாரட் துறவற சபையில் சேர்ந்து கன்னியாஸ்திரி ஆனார். 1975-ல் உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூருக்கு அனுப்பப்பட்டார். 1980-ல் கன்னியாஸ்திரியான இவர், 1992ல் மத்திய பிரதேச மாநிலம் உதய்நகருக்கு பணியாற்ற …

Read More »