வன்னிப் போரின்போது ஸ்ரீலங்காவைச் சுற்றிய வான்பரப்பில் ரியூ 142 எம் என்ற இந்திய கடற்படையின் நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு விமானம் விரிவான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா இதனைத் தெரிவித்துள்ளார். அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படையின் ராஜாளி தளத்தில் இருந்தே இந்த விமானம் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. ஐ.என்.எஸ் ராஜாளி தளத்தின் வெள்ளி விழா மற்றும் இந்திய கடற்படையினால் 29 …
Read More »வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கு இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு
இலங்கை படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கு, இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளீர்க்கும் விடயமானது இலங்கை அரசியலமைப்பிற்கு முரணானதாக அமையும் என்று இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யு.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முதல் முறையாக வெளிநாட்டு நீதிபதிகளை போர்க்குற்ற …
Read More »வடமாகாணத்தில் 256 மாணவர்கள் 9 பாடங்களில் ஏ சித்தி
வட மாகாணத்தில் இருந்து கடந்த ஆண்டு க.பொ.த சாதரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களில் 256 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தர சித்தியடைந்துள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற க.பொ.த சாதரண தரப் பரீட்சையில் வட மாகாணத்தில் 256 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ …
Read More »எமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்வையுங்கள்
காணமல்போனோர் விடயத்தை உதாசீனம் செய்யாது, தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தர முன்வரவேண்டும் என முல்லைத்தீவு மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் இருபத்து மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த தமது உறவுகள் தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்கவேண்டும் என வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் …
Read More »ஐ.நாவில் அரசின் செயற்பாடு குறித்து விசேட விவாதம்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவின் செயற்பாடு என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் விசேட விவாதத்தை நடத்துதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய ஒப்புதல் வழங்கியுள்ளார். கூட்டு எதிர்கட்சி விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் இந்த விவாதத்திற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் …
Read More »நியாயமான கோரிக்கையை அலட்சியப்படுத்தாது அனைவரும் ஒன்றிணைவோம்
உறவுகளை இழந்து தவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கையை அலட்சியப்படுத்தாது, அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வடமராட்சி கிறிஸ்தவ ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்களுடனான சந்திப்பின்போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர் கவனயீர்ப்பு பேராட்டம் இன்று …
Read More »லங்கா சதொச விற்பனை நிலையங்கள் : ஜனாதிபதி திறந்து வைப்பு
அனைத்து பிரதேசங்களிலும் லங்கா சதொச விற்பனை நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்தரத்திலான உணவுப் பொருட்களை குறைந்த விலையில் பாவனையாளர்களுக்கு வழங்குவது இதன் நோக்கமாகும். இதற்கமைய, முதலாவது விற்பனை நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை கொஹவல நகரில் திறந்து வைக்கப்பட்டது. இதற்கிணைவாக இன்று நாடு பூராகவும் 52 விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்பொது நாடு பூராகவும் 380 லங்கா சதொச நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்தவருடத்தில் …
Read More »தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு ஆதரவளித்த சந்தேகநபருக்கு 20 வருட சிறைத்தண்டனை
2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு ஆதரவளித்த சந்தேகநபருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த குண்டுத்தாக்குதலினால் டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் பேஸ் போல் அணியின் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு ஆதரவளித்த நாதன் எனப்படும் கனகசபை தேவதாசன் என்பவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு …
Read More »முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மோல்டா விஜயம்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மோல்டா நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். உலகளாவிய தலைமைத்துவ அமைப்பின் (Global Leadership Foundation) மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் மோல்டா சென்றுள்ளார். இம்மாநாட்டில் ‘பன்முகத்தன்மையை நிர்வகித்தல் தீவிரவாதத்தை எதிர்த்தலும்’ எனும் குழு விவாதத்துக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமை வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் அரசியல் யாப்பை மீறும் செயல்
ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் மூலமாக நாட்டின் அரசியல் யாப்பை மீறும் நடவடிக்கைகளில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார். நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாட்டிற்கு விற்பனை செய்யும் இந்த செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் பொருளாதார ஆய்வு பிரிவு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் நாட்டின் இதுவொரு மிகப்பெரிய பகற்கொள்ளை எனவும் …
Read More »