இங்கிலாந்து நாட்டில் பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது உரிமையாளர் ஒருவரை அவரது வளர்ப்பு நாய் கொடூரமாக கடித்துக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள உட் கிரீன் பகுதியில் மரியோ பெரிவொய்டோஸ்(41) என்ற நபர் வசித்து வந்துள்ளார்.இவரது வீட்டில் மேஜர் எனப் பெயரிடப்பட்ட வளர்ப்பு நாய் ஒன்று இருந்துள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில் உரிமையாளருக்கு நாய் உதவியாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பிபிசி செய்தி …
Read More »அமெரிக்க கோர்ட்டில் எச்-1 பி விசா வழக்கு தள்ளுபடி
குலுக்கல் நடத்துவதற்கு எதிரான எச்-1 பி விசா வழக்கினை அமெரிக்க கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா வழங்கும் ‘எச்- 1பி விசா’ இந்தியா உள்பட உலக நாடுகளில் எல்லாம் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்க குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி வேலை செய்ய இது உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அடுத்த நிதி ஆண்டுக்குரிய ‘எச்-1பி விசா’வுக்கு வரும் 3-ந் தேதி …
Read More »வவுனியா வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்
வேலைவாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஊர்வலமொன்றை மேற்கொண்டுள்ளனர். வேலைவாய்ப்பு வழங்குமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக எதுவித பதிலும் வழங்கப்படாத நிலையில், இன்றைய தினம் கவனயீர்ப்பு ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 9 மணியளவில் ஒன்றுதிரண்ட பட்டாரிகள், வேலைவாய்ப்பு வழங்குமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர். பேருந்து நிலையத்தின் …
Read More »தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம் -பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம் என விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கூறினார். சென்னையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- பணபலத்தை மீறி மக்கள் பலத்தை நம்பி ஆர்.கே நகரில் போட்டியிடுகிறோம். வருடாந்திர பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் இருக்கிறார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக இருக்கிறார் விரைவில் பரப்புரைக்கு வருவார். தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம். நதிகள் இணைப்பு விவசாயிகள், கச்சத்தீவு மீட்பு மீனவர்களின் …
Read More »புதிய வர்த்தமானியில் முஸ்லிம்களின் காணிகள் உள்வாங்கப்பட மாட்டாது – ஜனாதிபதி விளக்கம்
முஸ்லிம்களுக்கு சட்டரீதியாக உரிமையுள்ள எந்த முஸ்லிம் மத ஸ்தலங்களோ, கிராமங்களோ அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் மூலம் அரசுக்கு பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என ஜனாதிபதி செயலாளர் கையொப்பமிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரி முஸ்லிம் சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இந்த கடிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி …
Read More »அ.தி.மு.க.,வில் நிலவும் சர்ச்சைகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் ஸ்டாலின் மீன் பிடிக்க முயற்சிக்க வேண்டாம் – ஓ.பன்னீர்செல்வம்
சசிலாவைப் பற்றி, ஓ.பன்னீர்செல்வம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் விமர்சித்து பேசினால் தான், அது மக்கள் மத்தியில் வேகமாகச் சென்று சேர்ந்து, தினகரனுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அதை செய்யாமல் இருக்கிறார். அதை, அவர் செய்வது போல, பேசுங்கள் என, கட்சியின், சீனியர் தலைவர்கள் சிலர், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினிடம் கூறியுள்ளனர். அதையடுத்தே, அவர், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து, ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிறைய தெரியும். ஆனாலும், …
Read More »தமிழகத்தில் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்க ஏற்பாடு
தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் போலி அட்டைகளும் இடம்பெற்றுள்ளன. எலெக்ட்ரானிக் பதிவுகளின் அடிப்படையில் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளை வழங்கினால் போலி அட்டைகள் தானாக ஒழிந்துவிடும் என்று கணக்கிட்டு, ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதன் பின்னர் ரேஷன் அட்டைகளை ஆதார் தகவலுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரேஷன் அட்டைகளுக்கான ஆதார் பதிவு தகவல்களும் பெறப்பட்டுவிட்டன. 99 சதவீதம் …
Read More »இன்சூரன்ஸ், மதிப்பு கூட்டு வரி உயர்வை கண்டித்து தென்னிந்தியா முழுவதும் 30 லட்சம் லாரிகள் ஓடாததால் ரூ.1500 கோடி சரக்குகள் தேக்கம்
இன்சூரன்ஸ், மதிப்பு கூட்டு வரி உயர்வை கண்டித்து தென்னிந்தியா முழுவதும் 30 லட்சம் லாரிகள் ஓடாததால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை அழிக்கவும் உத்தரவிட்டது. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ வரியை உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக் நடைபெறுகிறது. மத்திய, மாநில அரசுகள் …
Read More »தி.மு.க. தான் எங்களின் பிரதான எதிரி – அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் – ஜெ.தீபா பேட்டி
‘தி.மு.க. தான் எங்களுக்கு பிரதான எதிரி’ என்றும், ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களை எதிர்க்கும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள்’ என்றும் ஜெ.தீபா கூறினார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட புது வண்ணாரப்பேட்டையில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தேர்தல் பணிமனையை பேரவையின் பொது செயலாளர் ஜெ.தீபா திறந்து வைத்தார். இந்த விழாவில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி, மாவட்ட பொறுப்பாளர்கள் குமரி செந்தில்குமரன், கடலூர் செல்வவிநாயகம், மற்றும் செல்வராஜாமணி …
Read More »முள்ளிக்குளம் மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்கு பெருகும் ஆதரவுகள்
மன்னார் – முள்ளிக்குளம் கிராமத்தை ஸ்ரீலங்கா கடற்படையினரிடமிருந்து விடுவிக்குமாறு வலியுறுத்தி கிராம மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று எட்டாவது நாளாக தொடர்கின்றது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு மன்னார் – விடத்தல்தீவு கிராம மக்கள் நேரடியாக விஜயம் செய்து ஆதரவு வழங்கியுள்ளனர். ஸ்ரீலங்கா கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த 23 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த போராட்டம் முள்ளிக்குளம் கிராம …
Read More »