எந்த மட்டத்திலிருந்து அழுத்தங்கள் வந்த போதிலும் கிழக்கில் மதுபான உற்பத்திசாலைகளை அமைப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ நசீர் அஹமட் சூளுரைத்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் இளம் சமூகத்தினரின் எதிர்காலம் கண்முன்னே சீரழிக்கப்படும் போது அதை கைகட்டி வாய்மூடி பார்த்துக் கொண்டிருப்பதற்கு தாம் ஒரு போதும் தயாரில்லை எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபையில் இடம்பெற்ற …
Read More »புதிய ஸ்ரீலங்காவை கட்டியெழுப்ப இளைஞர்களுக்கு சம்பந்தன் அழைப்பு
புதிய ஸ்ரீலங்காவை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்கட்சித் தலைவரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இளைஞர்களிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமாதானத்தை கட்டியெழுப்புவதன் ஊடாக நாட்டை பொருளாதார ரீதியாகவும் முன்னேற்ற தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருவதாகக் குறிப்பிடும் சம்பந்தன் இதற்கு வடக்கு கிழக்கு மற்றும் தென் பகுதி உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் …
Read More »மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் முக்கிய பதவி
இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் பொதுஉதவி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா இராணுவத்தின் 28 ஆவது பொது உதவி அதிகாரியாக அவர் நேற்று பதவியைப் பொறுப்பேற்றுள்ளார். சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதிக்கு உதவியாக நிர்வாகப் பணிகளை இவர் ஆற்றுவார். இதற்கு முன்னர் இவர் சிறிலங்கா இராணுவத்தின் 53 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றி வந்தார். …
Read More »சர்வதேசம் தமிழர் பக்கம்! அச்சத்தில் மைத்திரி அரசு!! – சுமந்திரன் சுட்டுக்காட்டு
“சர்வதேச சமூகம் தமிழர்களுடன் இருப்பதைக் கண்டு மைத்திரி அரசு பயப்படுகின்றது. எனவே, சர்வதேச சமூகத்தை இன்னும் கூடுதலாக இறுக்கிக்கொண்டு நாங்கள் வெற்றி பெற வேண்டும். அதை விடுத்து சர்வதேச சமூகத்தினரை அடித்து விரட்டுகின்ற அடிமுட்டாள்தனமான காரியங்களில் தமிழர்கள் ஈடுபடக்கூடாது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டுப் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு …
Read More »வத்துகாமத்தில் உடைந்து விழுந்தது பாடசாலைக் கூரை! – 26 மாணவர்கள் காயம்
கண்டி, வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள சிரிமல்வத்தை நவோதயப் பாடசாலையின் நேற்றுக் கூரை உடைந்து விழுந்ததில் 26 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். தரம் 5 வகுப்பில் நடந்த இவ்விபத்தில் இயற்கைக்கடன் கழிக்கச் சென்ற ஒரு மாவணைத்தவிர ஏனைய அனைவரும் காயமடைந்து கண்டி வைத்திய சாலையின் 70ஆம் வார்ட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்தையடுத்து குறித்த பாடசாலை வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தரம் 5 வகுப்பு மாணவர்களின் பெற்றோர் பதறியடித்துக்கொண்டு கதறியபடியே …
Read More »தமிழர் தாயகத்தில் தொடர்கின்றது உறவுகளின் கவனயீர்ப்புப் போராட்டம்!
காணாமல்போனோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை 40ஆவது நாளாகவும் தொடர்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலிறுத்தி உறவினர்கள் தமிழர் தாயகத்தில் காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்தப் போராட்டம் வடக்கு, கிழக்கில் 5 மாவட்டங்களில் இன்றும் தொடர்கின்றது. “உறுதியான தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. எம்மை வீதியில் விட்டு வேடிக்கை பார்ப்பதை விடுத்து தீர்வைப் பெற்றுத் தரவேண்டும்” என்று காணாமல்போனோரின் உறவினர்கள் கூறியுள்ளனர். …
Read More »சரணடைந்த போராளிகள் விவகாரம்: சவேந்திர சில்வா மீதும் திரும்புமா விசாரணை?
வன்னியில் இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான வழக்கில் 58ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பாணை விடுப்பதா, இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை முல்லைத்தீவு நீதிமன்றம் அடுத்தமாதம் அறிவிக்கவுள்ளது. மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இந்த வழக்குடன் தொடர்புபட்டுள்ளதால் அவருக்கு அழைப்பாணை பிறப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வியாக்கிழமை கோரிக்கை முன்வைக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் திருகோணமலை …
Read More »பாவற்குளம் கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை!
வவுனியா, பாவற்குளம் பகுதியில் ஒருவரைக் கொலை செய்த குற்றத்துக்காக எதிரிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. பாவற்குளம் பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25, 26ஆம் திகதிகளில் ஆறுமுகம் இலங்கராசா என்பவருக்கு மின்சாரம் பாய்ச்சி கிணற்றுக்குள் போட்டுக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டுக்காக 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் தில்லையம்பலன் …
Read More »யாழ். பல்கலை நிர்வாகத்தின் அடக்குமுறையைக் கண்டித்து கலைப்பீட மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தில் வகுப்புத்தடை விதிக்கப்பட்ட 13 மாணவர்களையும் மீள இணைத்துக்கொள்ளுமாறு கோரியும், யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தின் அடக்குமுறைகளைக் கண்டித்தும் கலைப்பீட மாணவர்கள் இன்று வியாழக்கிழமையிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வகுப்புத் தடை விதிக்கப்பட்ட 13 மாணவர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மீள இணைக்காவிடின், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆதரவுடன் அனைத்துப் பீடங்களையும் முடக்கி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கலைப்பீட மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த 11ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் …
Read More »ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து வரலாறு காணாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள்
ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான வீடுகள் மூழ்கி கிடக்கின்றன பசிபிக் கடலில் மையம் கொண்டு இருந்த புயல் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள தென் கிழக்கு குயின்ஸ்லாந்து பகுதியை தாக்கியது. இந்த புயல் காரணமாக அந்த பகுதியில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. புயல் தாக்குதலுக்கு பிறகு இதுவரை 40 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 20 …
Read More »