வவுனியாவில் மின்சார சபையின் ஊழியர்கள் சீரான முறையில் மின்பட்டியலை வழங்காமையினால் மின் பாவனையாளர்கள் அதிகளவு பணத்தினை மின்சார சபைக்கு செலுத்தவேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மின் பாவனையாளர் கருத்து தெரிவிக்கையில், மின்சார பாவனைக்கான பட்டியலில் அளவீட்டு முறையில் பணம் அறவிடப்படுகின்றது. குறிப்பாக முதலாவது யூனிட்டில் இருந்து 156 ஆவது யூனிட் வரையான ஒவ்வொரு 39 யூனிட்டுக்கும் அறவீட்டு தொகை மாற்றம் அடைந்து செல்லும். இதன்போது 79 ஆவது யூனிட்டில் இருந்து …
Read More »அரசமைப்பு விடயத்தில் அரசு பின்வாங்கும் ஆபத்து! – மஹிந்தவின் மே தின நிகழ்வே காரணம் என்கிறார் சம்பந்தன்
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியின் மே தினக் கூட்டத்துக்குத் திரண்ட சிங்கள மக்களினால் அரசமைப்பு விடயத்தில் அரசு பின்வாங்கும் ஆபத்து இருக்கின்றது.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (இலங்கைத் தமிழரசுக் கட்சி), செல்வம் …
Read More »முள்ளிவாய்க்கால் நினைவேந்தலன்று முல்லைத்தீவுக்கு செல்கிறார் மைத்திரி!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18 ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செல்லவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வறுமை ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்துக்காக ஜனாதிபதி முல்லைத்தீவுக்குச் செல்லவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு இந்த வருடம் தேசிய வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. நாட்டில் மிகவும் வறுமையான மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தேசிய …
Read More »மூன்று நாள் பயணமாக வடக்குக்கு ரணில்! – 19ஆம் திகதி செல்கிறார்
வடக்கு மாகாணத்துக்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 19ஆம் திகதி செல்லவுள்ளார். பல்வேறு சந்திப்புக்களையும், ஆராய்வுகளையும் மேற்கொள்ளும் நோக்குடனேயே அவரது இந்தப் பயணம் அமையவுள்ளது எனத் தெரியவருகின்றது. இந்த மாதம் 19 ஆம் திகதி மன்னார் மாவட்டத்துக்கு பிரதமர் செல்லவுள்ளார். அங்கு பல்வேறு தரப்புக்களையும் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தவுள்ளார். 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செல்லவுள்ளார். …
Read More »கொலையாளிகளின் பாதுகாப்பு அரணாகவே தூதரகங்களைப் பயன்படுத்தினார் கோட்டா! – மங்கள குற்றச்சாட்டு
படுகொலைகள் மற்றும் கடத்தல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அரணாகவே வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தினார் என்று சபையில் தெரிவித்தார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளையை அங்கீகரித்துக்கொள்வதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அத்துடன், கோட்டாபயவின் புதல்வர், மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஆகியோர் தொடர்பிலும் அவர் தகவல்களை …
Read More »மே 24-இல் போப் பிரான்சிஸ் – டொனால்டு டிரம்ப் சந்திப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டு திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போப் பிரான்சிஸ்-ஐ மே மாதம் 24-ந்தேதி சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் டொனால்டு டிரம்ப் அமெரிக்கா திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ சந்திக்க இருப்பதாக …
Read More »எல்லைப் பகுதியில் ஆப்கானிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு – பாகிஸ்தானை சேர்ந்த 3 பேர் பலி
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சமான் மாவட்டத்துக்குட்பட்ட காலி லுக்மான் மற்றும் காலி ஜஹாங்கிர் ஆகிய இடங்களில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதி முகாம்களில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து அந்நாட்டு ராணுவ …
Read More »ஆசிரிய உதவியாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவை நிலுவையுடன் வழங்க நடவடிக்கை: இராதாகிருஸ்ணன்
ஆசிரிய உதவியாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகளை நிலுவையுடன் வழங்குவதற்கு கல்வி அமைச்சினால் சுற்றுநிருபங்கள் மாகாண பிரதான செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நேற்றையதினம் நடைபெற்ற கூட்டம் ஒன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் தொிவித்த இராஜாங்க அமைச்சர், “கடமையில் ஈடுபட்டுள்ள ஆசிரிய உதவியாளர்களுக்கான 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் மேலதிக கொடுப்பனவு தொகையான 4 ஆயிரம் ரூபாவையும் சேர்த்து மொத்தமாக …
Read More »பணிப்பகிஷ்காிப்பை அறிவித்துவிட்டு தனியார் வைத்தியசாலைகளில் பணிபுரிகின்றனர்: லக்ஷ்மன் கிரியெல்ல
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் வைத்தியர்கள் மாலை வேளையில் தனியார் வைத்தியசாலைகளில் அதிக கொடுப்பனவுக்கு பணியாற்றி வருகின்றனர் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அமைச்சர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்பதிவு முறையில் தனியார் வைத்தியசாலைகளில் அதிக கொடுப்பனவுக்கு வைத்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் …
Read More »தமன்கடுவ பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
87 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தமன்கடுவ பிரதேச செயலகத்தின் புதிய நிர்வாகக் கட்டிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் மக்களிடம் கையளிக்கப்பட்டது. மூன்று மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடத்தின் மேல் மாடியில் 350 பேர் அமரக்கூடிய வகையிலும், வெளிக்கள உத்தியோகத்தர் பிரிவு மற்றும் சமூக அபிவிருத்தி பிரிவு என்பனவும் நிறுவப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் மின்னேரியா, மெதிரிகிரிய. ஹபரண, ஹிங்குராங்கொட ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கும், …
Read More »