தமிழ் மக்கள் கருவறுக்கப்பட்ட தினமாக அடையாளப்படுத்தப்பட்ட மே 18ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவுக்கு வருவதைத் தவிர்த்து பிறிதொரு தினத்தில் வரவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக முள்ளிவாய்க்காலில் குவிக்கப்பட்டு வெளிநாடுகளின் உதவியோடு பல்லாயிரக்கணக்கில் கருவறுக்கப்பட்ட நாளான மே 18ஐ தமிழ் மக்கள் ஆறாத வடுவாக எண்ணி நினைவுகூரும் …
Read More »மஹிந்த பற்றி தீர்மானம் எடுக்க சு.கவின் உயர்பீடம் முஸ்தீபு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போஷகராக வைத்திருப்பதா, இல்லையா என்பதைப் பற்றிய தீர்மானம் சு.கவின் அடுத்த நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது என அந்தக் கட்சியின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த வாரம் வரும் வெசாக் பூரணை தினத்தின் பின் கூடவுள்ள நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போஷகராக இருந்துகொண்டே அந்தக் …
Read More »தேசிய அபிவிருத்தி இலக்குகளில் மாகாண சபைகளின் கவனம் தேவை! – முதலமைச்சர்கள் மாநாட்டில் ஜனாதிபதி வலியுறுத்து
நாட்டின் தேசிய அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கு மாகாண சபைகளின் செயற்பாடுகள் முறைப்படியாக இருக்க வேண்டியதுடன் மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பும் சீர்செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஹபரண சினமன் லொஜ் விருந்தகத்தில் நேற்று நடைபெற்ற 33 ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “ஒன்பது மாகாண சபைகளும் ஒன்பது விதமாக செயற்படுவதனால் நாட்டின் பொது …
Read More »நல்லிணக்கம், சகவாழ்வுக்கான தேசிய கொள்கையை ஏற்றது அமைச்சரவை! – மைத்திரி, மனோ கூட்டாக சமர்ப்பிப்பு
நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை பத்திரத்தை தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் என்ற முறையில் அமைச்சர் மனோ கணேசனும் கூட்டாக கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்பித்துள்ளனர். இந்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது. அமைச்சரவை சம்பிரதாயத்தின்படி எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள அடுத்த அமைச்சரவை …
Read More »ஈராக்கில் மேற்கு மொசூலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 31 பேர் கொன்று குவிப்பு
ஈராக்கில் மேற்கு மொசூலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து போலீஸ் படை மீட்டுள்ளது. அப்போது நடந்த மோதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 23 பேர் கொல்லப்பட்டனர். ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மொசூல் நகரின் கிழக்கு பகுதியை ராணுவம் கடந்த ஜனவரி மாதம் மீட்டது. அதைத் தொடர்ந்து மேற்கு பகுதியையும் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து தங்கள் வசப்படுத்துவதற்காக ராணுவம் கடுமையாக சண்டையிட்டு வருகிறது. இந்த சண்டை தற்போது உக்கிரம் அடைந்துள்ளது. …
Read More »மூன்று கடற்கொள்ளையர்களை சீனா சோமாலியா அதிகாரிகளிடம் ஒப்படைத்தது
சந்தேகத்திற்கிடமான மூன்று கடற்கொள்ளையர்களை சோமாலிய அதிகாரிகளிடம் சீனா ஒப்படைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சீனா கடற்படையைச் சேர்ந்த கப்பலில் இருந்து மூன்று கடற்கொள்ளையர்களை சோமாலிய அதிகாரிகளிடம் சீனா ஒப்படைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஏப்ரலில் OS35 எனும் துவாலோ கொடியுடன் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை கொள்ளையடிக்க முயன்றதாக மூன்று கடற்கொள்ளையர்களை சீன கடற்படை அதிகாரிகள் கைது செய்தனர். இதன் மூலம் கொள்ளையர்களின் திருட்டு முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 2011 ஆம் …
Read More »வடகொரிய அதிபரை கொல்ல அமெரிக்கா-தென்கொரியா சதி
அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனைக்கு எதிராக அமெரிக்கா தீவிர நடவடிக்கை மேற் கொண்டுள்ளது. கொரிய தீப கற்ப பகுதிக்கு அமெரிக்கா தனது 2 போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளது. இதனால் கொரிய தீப கற்பத்தில் போர் பதட்டம் நிலவுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கை கொல்ல சதி …
Read More »25 மில்லியன் ரூபா செலவில் வெசாக் பண்டிகையை கொண்டாடிய மஹிந்தவின் மனைவி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான, முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, யுனெஸ்கோவின் ஏற்பாட்டில் பரிஸில் நடைபெற்ற வெசாக் பண்டிகையை பார்வையிடுவதற்கு 25 மில்லியன் ரூபா செலவிட்டதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு பரிஸ் சென்றபோது ஷிரந்தி ராஜபக்ஷ தங்கியிருந்த ஹோட்டலின் அறை ஒன்றுக்கான ஒரு நாள் வாடகை, 63 …
Read More »நான் கூறியதை போன்று செய்திருந்தால் மீதொட்டமுல்ல அனர்த்தம் ஏற்பட்டிருக்காது: பைசர் முஸ்தபா
தான் கூறிய விடயங்களை செயற்படுத்தியிருந்தால் பல உயிர்களை காவுகொண்ட மீதொட்டமுல்ல அனர்த்தம் அரங்கேறியிருக்காது என உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கண்டி கொஹகொட குப்பை மேடும் சரியும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், இப்பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக அங்கு சென்றிருந்த வேளையிலே அமைச்சர் பைசர் முஸ்தபா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ”மீதொட்டமுல்லையை போன்று அனர்த்தம் ஒன்று கொஹகொட …
Read More »மஹிந்த ஆட்சியாளர்கள் போன்று சர்வதேசத்திடம் மண்டியிடும் கொள்கை நல்லாட்சியில் இல்லை: முஜிபுர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இருந்த ஆட்சியாளர்களை போன்று, சர்வதேசத்திடம் மண்டியிடும் கொள்கை நல்லாட்சியிடம் இல்லை என கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தூதரகங்களுக்கான சிறப்புரிமை குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று வடக்கு- தெற்கு …
Read More »