காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 75ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கிறது. வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் தீர்வு எதுவும் எட்டப்படாத நிலையில் முன்னெடுக்கப்படுகின்றது. அவசரகாலச் சட்டத்தினை இரத்துச் செய்யுமாறும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விபரங்கள் விரைவில் அரசாங்கத்தினால் வெளியிட வேண்டுமெனவும் கோரி வடக்கு கிழக்கின் ஐந்து மாவட்டங்களில் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து …
Read More »அரசமைப்பில் தமது நிலைப்பாட்டில் அழுத்தம் கொடுக்கிறது மஹிந்த அணி!
அரசமைப்புத் தொடர்பில் தம்மால் முன்வைக்கப்படும் திருத்தங்கள் உள்வாங்கப்படாவிட்டால், வழிநடத்தல் குழுவிலிருந்து வெளியேறுவோம் என்று பொது எதிரணியான மஹிந்த அணியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வழிநடத்தல் குழு, இடைக்கால அறிக்கையை தயாரித்துள்ளது. கடந்த 3 ஆம்திகதி இடைக்கால அறிக்கையின் வரைபு, வழிநடத்தல் குழுவின் சகல உறுப்பினர்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது. இடைக்கால வரைவு மீதான கருத்துக்களை, வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் …
Read More »தேர்தல்களுக்குத் தயாராகுங்கள் – ஐதேகவினருக்கு ரணில் அழைப்பு
எதிர்காலத் தேர்தல்களுக்குத் தயாராகும்படி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். சிறிகோத்தாவில் ஐதேகவின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கூடுதல் பொறுப்புணர்வுடன் கூடிய கட்சியாக- இளைஞர்களின் பங்களிப்புடன் ஐதேகவை பரந்துபட்ட அளவில் நவீனமயப்படுத்த வேண்டும். அமைச்சர்கள் தமது தொகுதிகளில் அதிகளவு நேரத்தைச் செலவிட வேண்டும். மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து தொகுதிகளில் மேற்கொள்ளப்படக் கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாட வேண்டும். எந்த தேர்தலுக்கு …
Read More »இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களைக் கோருகிறார் கம்மன்பில
இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களைத் தருமாறு சிறிலங்கா குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறார். கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இரட்டைக் குடியுரிமை கொண்டவர் என்பதால், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்று சிறிலங்காவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்தவாரம் தீர்ப்பளித்திருந்தது. அதேவேளை, …
Read More »மோடியின் பயணத்தில் பொருளாதார நோக்கங்கள் கிடையாது – இந்தியத் தூதுவர்
இந்தியப் பிரதமரின் சிறிலங்கா பயணம் எந்த பொருளாதார நோக்கங்களையும் கொண்டதாக இருக்காது என்று சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதுகுறித்து தகவல் வெளியிட்ட இந்தியத் தூதுவர், “நாளை மறுநாள் மாலை கங்காராமய வெசாக் வலயத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து, இந்தியப் பிரதமர் திறந்து வைப்பார். …
Read More »கீதா குமாரசிங்கவின் பதவி ரத்து – நாடாளுமன்ற செயலாளர் அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பதவி வெற்றிடமாகியுள்ளதாக, சிறிலங்கா நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க அறிவித்துள்ளார். மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு அமைய கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளதால், கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்க தகுதியற்றவர் என்று கடந்த மே 3ஆம் நாள் மேல்முறையீட்டு …
Read More »2020 தேர்தலின் பின்பும் தேசிய அரசே அமையும்! – அமைச்சர் ராஜித தெரிவிப்பு
2020 இல் நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை அடுத்தும் தேசிய அரசே அமைக்கப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தேசிய அரசை நிராகரிக்கும் அளவுக்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “நாம் வெற்றிகரமான மே தினக் கூட்டம் ஒன்றை நடத்தி முடித்துள்ளோம். எமது அரசியல் பலம் அதிகரித்துள்ளதை நாம் உணர்கின்றோம். எமது அடுத்த நகர்வுக்கு அது …
Read More »குளவிகளின் அச்சுறுத்தலால் பாடசாலைக்கு விடுமுறை!
குளவிகளின் அச்சுறுத்தலால் பாடசாலைக்கு விடுமுறை! குளவிகள் தாக்கும் அச்சுறுத்தலால் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்ட சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு -13, கொட்டாஞ்சேனை, சென் லூசியஸ் கல்லூரியிலேயே மாணவர்களுக்கு இன்று திங்கட்கிழமை இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையின் வளாகத்திலுள்ள மரமொன்றில் குளவிகள் கூடு கட்டியுள்ளன. இந்நிலையில், கடந்த வெள்ளியன்று கல் தாக்குதல் காரணமாக குளவிக் கூடொன்று கலைந்துள்ளது. இதையடுத்து மாணவர்களையும், ஆசிரியர்களையும் குளவிகள் கொட்டியுள்ளன. மறுநாள் சனிக்கிழமையன்று கொழும்பு மாநகர …
Read More »மஹிந்த கூட்டத்தில் திரண்ட மக்கள் வெள்ளத்தால் கூட்டரசு அதிர்ச்சி!
மஹிந்த அணியின் மே தினக் கூட்டத்துக்குக் கிடைத்த வெற்றியால் மைத்திரி – ரணில் விக்கிரமசிங்க அரசு அதிர்ச்சியடைந்துள்ளது என்று ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- மே தினத்தின் பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது பிரதிபலித்துள்ளது. இதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் கூட்டத்தைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில் மஹிந்த அணியினரின் மே தினப் …
Read More »பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மக்ரான் வெற்றி
இரண்டு கட்டங்களாக நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மக்ரான் 65 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே மக்கள் செல்வாக்கை இழந்ததால் இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார். இந்த தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், …
Read More »