சோமாலியாவில் ராணுவ தளத்தின் மீது அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கத்திய பாணியில் செயல்படும் சோமாலியா அரசாங்கத்தை வீழ்த்த அல்-ஷபாப் தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு நகர்ப்புறங்களில் ஆதிக்கம் செலுத்திய அல் ஷபாப் தீவிரவாதிகளை ஆப்ரிக்க யூனியன் மற்றும் சோமாலி படைகள் விரட்டியடித்துள்ளன. ஆனால், சிறிய மற்றும் தொலைதூர கிராமப் புறங்களை அவர்களிடம் இருந்து பாதுகாக்க போராடி …
Read More »அமெரிக்க எரிசக்தி துறையில் இந்திய வம்சாவளிக்கு உயர்பதவி
அமெரிக்காவின் எரிசக்தி துறையில் முக்கிய அமைப்பாக திகழ்கிற மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக நீல் சாட்டர்ஜியை ஜனாதிபதி டிரம்ப் நியமனம் செய்துள்ளார். அமெரிக்காவின் எரிசக்தி துறையில் முக்கிய அமைப்பாக திகழ்கிற மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக நீல் சாட்டர்ஜியை (வயது 40) ஜனாதிபதி டிரம்ப் நியமனம் செய்துள்ளார். கென்டக்கியில் வசித்து வரும் இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவர் அமெரிக்க பாராளுமன்ற செனட் சபையில் ஆளுங்கட்சி …
Read More »அமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்படவில்லை – ராஜித சேனாரத்ன
அமைச்சரவை மாற்றம் தொடர்பாக நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சிறிலங்கா அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக ஊடகங்கள் கடந்த சில நாட்களாக செய்திகளை வெளியிட்டு வந்தன. இந்தநிலையிலேயே, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எதையும் பேசவில்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அதேவேளை அமைச்சரவை மாற்றம் கூடிய விரைவில் இடம்பெற வாய்ப்பில்லை என்று …
Read More »சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 5 வீதத்தை எட்டாது – ஐ.நா அமைப்பு கணிப்பு
சிறிலங்காவின் பொருளாதாரம் இந்த ஆண்டில் மிகச் சிறிய வளர்ச்சியையே எட்டும் என்று ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான ஐ.நா பொருளாதார சமூக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆசிய பசுபிக்கிற்கான ஐ.நா பொருளாதார சமூக ஆணைக்குழுவின் ஆய்வு அறிக்கை- 2017 நேற்று கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2016ஆம் ஆண்டு 4.4 வீதமாக இருந்த சிறிலங்காவில் பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டில் 4.8 வீதமாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில், இது 4.9 வீதமாக …
Read More »இன்னொரு போரை எதிர்கொள்ள நேரிடும் – சந்திரிகா எச்சரிக்கை
நல்லிணக்கம் மாத்திரமே, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அவர், ‘சிறிலங்கா அதிபர், பிரதமர், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோரைக் கொண்ட தேசிய பாதுகாப்புச் சபை தொடர்ச்சியாக கூடி பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்தும், கட்சிகள் மற்றும் தரப்புகளின் அறிக்கைகள் தொடர்பாகவும் விவாதிக்கின்றது. ஆனால், தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்களை நல்லிணக்கத்தின் மூலமே தடுக்க முடியும். இதனை இப்போது …
Read More »சிரியாவில் ரஷிய அதிகாரியின் தலையை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் அராஜகம்
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துவரும் ரஷியாவை சேர்ந்த அதிகாரியின் தலையை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்ற வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துவரும் ரஷியாவை சேர்ந்த அதிகாரியின் தலையை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்ற வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராடி …
Read More »அமெரிக்காவுக்குள் கள்ளத்தனமாக நுழைந்த சீக்கியர் கைது
மெக்சிகோ நாட்டு எல்லை வழியாக 19 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்குள் கள்ளத்தனமாக நுழைந்து அங்கு வாழ்ந்து வந்த சீக்கியரை கைது செய்துள்ள குடியுரிமைத்துறை அதிகாரிகள் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப தீர்மானித்துள்ளனர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் குர்முக் சிங். சீக்கிய மதத்தை சேர்ந்த இவருக்கு தற்போது வயது 46. இந்தியாவில் டாக்சி டிரைவராக இருந்த இவர் கடந்த 1998-ம் ஆண்டு மெக்சிகோ நாட்டுக்கு சென்றார். அங்கிருந்து எல்லை வழியாக …
Read More »ஆப்கானில் கூடுதலாக 3 ஆயிரம் அமெரிக்க வீரர்கள்: டிரம்ப் புது திட்டம்
தலிபான்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளை கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தானில் கூடுதலாக அமெரிக்க வீரர்கள் 3 ஆயிரம் பேரை இறக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. இந்த தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க ஆப்கான் அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. ஆப்கானிஸ்தான் அரசுக்கு உறுதுணையாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளைச் சேர்ந்த 10 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இருந்து …
Read More »தமிழர்களை ஒடுக்க முயற்சிக்கும் அரசு
பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் தினத்தில் அரச நிகழ்வு ஒன்றிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்யவுள்ளமை தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்க முடியும் என்பதை காட்டுவதாக அமைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதேவேளை தமிழர் தாயகப் பகுதிகளில் வெசாக் கூடுகளை இராணுவத்தினர் அமைத்து வருகின்றமை சிங்கள மயமாக்கலின் ஒரு அங்கம் எனவும் வடமாகாண சபை உறுப்பினர் சுப்ரமணியம் பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார். வெசாக் …
Read More »இந்தியாவும் இலங்கையும் கலாசாரத்தால் ஒன்றிணைந்துள்ளது: இராதா வெங்கட்ராமன்
இந்தியாவும் இலங்கையும் ஒன்றிணைந்த கலை கலாசார அம்சங்களை கொண்டதாகக் காணப்படுகின்றதென கண்டி உதவி இந்தியத் தூதுவலராயத்தின் தூதுவர் இராதா வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். இந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 156 ஜனன தின நிகழ்வு கண்டி உதவி இந்தியத் தூதுவராயத்தின் பாரத கேந்திர நிலையத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், சமூகங்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வுக்கும் அறிவு மேம்பாட்டுக்கும் உந்து சக்தியாக மொழியே …
Read More »