Monday , October 20 2025
Home / செய்திகள் (page 431)

செய்திகள்

News

சிறிலங்கா வழியாக ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அனுப்பப்பட்ட மாத்திரைகள் இத்தாலியில் சிக்கின

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இந்தியாவில் இருந்து சிறிலங்கா வழியாக கப்பலில் அனுப்பப்பட்ட 37 மில்லியன் வலி நிவாரணி மாத்திரைகள் இத்தாலி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. Tramadol என்ற வலி நிவாரணியாகப் பயன்படுத்தும் 37 மில்லியன் மாத்திரைகள் இந்திய மருந்து நிறுவனம் ஒன்றினால், லிபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சிறிலங்காவில் இருந்தே இந்த மருந்துக் கொள்கலன்கள், கப்பல் மூலம் லிபியாவுக்கு அனுப்பப்பட்டது. லிபியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் தேவைக்காகவே இவை அனுப்பி வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இத்தாலியின் ஜினோவா …

Read More »

சிறிலங்காவில் அதிகாரபூர்வ பேச்சுக்களை நடத்தமாட்டார் நரேந்திர மோடி

சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா தலைவர்களுடன் முறைப்படியான அதிகாரபூர்வ பேச்சுக்களை நடத்தமாட்டார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலர் சஞ்சய் பாண்டா தெரிவித்துள்ளார். ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 5.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சென்றடைவார். அங்கிருந்து வாகனம் மூலம் கங்காராமய விகாரைக்குச் சென்று, சிறிலங்கா பிரதமருடன் இணைந்து அலங்கார விளக்குகளை திறந்து …

Read More »

தொண்டாவும் திகாவும் நாளை ஒரே மேடையில்! சங்கமிக்கவைக்கிறது மோடியின் வருகை!! – ஹட்டனைச்சூழ வரலாறுகாணாத பாதுகாப்பு

மலையக அரசியல் களத்தில் இரு துருவங்களாக வலம்வரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பியும், தொழிலாள் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் திகாம்பரமும் எதிர்வரும் நாளை வெள்ளிக்கிழமை ஒரே மேடையில் அமரவுள்ளனர். இலங்கைக்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை ஹட்டனுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். நோர்வூட் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையிலிருந்து மலையக மக்களுக்காக அவர் சிறப்புரையாற்றவுள்ளார். அத்துடன், இந்திய அரசின் நிதியுதவியுடன் …

Read More »

வடக்கு, கிழக்கில் பொருத்து வீட்டை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

வடக்கு – கிழக்கில் முன்நிர்மாணிக்கப்பட்ட – பொருத்து வீட்டை அமைப்பதற்கு நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தலா 15 இலட்சம் ரூபா செலவில் 6 ஆயிரம் வீடுகள் இதற்கு அமைவாக அமைக்கப்படவுள்ளது. முன்நிர்மாணிக்கப்பட்ட – பொருத்து வீட்டை, வடக்கு – கிழக்கில் அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. வடக்கு மாகாண சபையும் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இவற்றைப் புறமொதுக்கி, முன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை …

Read More »

சர்வ மதங்களையும் காப்பதே நல்லாட்சியின் நிகழ்ச்சி நிரல்! – பௌத்தத்துகுரிய முன்னுரிமை அப்படியே இருக்கும் என்கிறார் மைத்திரி

அரசமைப்பில் பௌத்த சமயத்துக்குரிய முதன்மை இடம் பாதுகாக்கப்படும் என்றும், அதேபோல் சமயங்களுக்கும் நியாயத்தை வழங்குவதே அரசின் நிகழ்ச்சிதிட்டமாகும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பத்தரமுல்லை அபேகம வளாகத்தில் நேற்று நடைபெற்ற ரணவிரு வீடுகள் மற்றும் காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பௌத்த தத்துவத்தின் உன்னத செய்தியை உலகுக்கு எடுத்துச்செல்லும் நோக்கிலேயே சர்வதேச வெசாக் தின நிகழ்வுகள் இலங்கையில் …

Read More »

வித்தியா படுகொலை வழக்கை விசாரிக்க ‘ட்ரயல் அட் பார்’! – சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை; கொழும்பில் நடத்தவும் யோசனை முன்வைப்பு

வித்தியா படுகொலை வழக்கை விசாரிக்க ‘ட்ரயல் அட் பார்’! – சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை; கொழும்பில் நடத்தவும் யோசனை முன்வைப்பு யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் ‘ட்ரயல் அட் பார்’ முறையில் நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது என்று அறியமுடிகின்றது. கொழும்பில் இந்த விசாரணையை முன்னெடுக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா 2015ஆம் ஆண்டு …

Read More »

தொழிற்சங்க நடவடிக்கைகளை அடக்கும் எதேச்சதிகாரத்துக்கு எதிராக அரச வைத்தியர் சங்கம் போர்க்கொடி!

இம்முறை சர்வதேச தொழிலாளர் தினத்தன்று தங்களது தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் முறையில் ஒருசில அமைச்சர்கள் கருத்து வெளியிட்டிருப்பதை இலங்கை அரச வைத்தியர்கள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்த எதேச்சதிகாரப் போக்குக்கும் அடக்குமுறைக்கும் எதிராக தாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடு செய்யவுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் டாக்டர் நளின் டீ ஹேரத் தெரிவித்துள்ளார். “இலங்கை அரச வைத்தியர்கள் சங்கம் அரசைக் கவிழ்க்கவோ, புதிய …

Read More »

சுதந்திரத்தை சொந்த மண்ணில் இழந்து வாழும் முள்ளிக்குளம் மக்கள்

முள்ளிக்குளம் மக்களின் 38 நாட்கள் தொடர் போராட்டத்தின் பின்னர் அவர்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு, மக்கள் முள்ளிக்குளம் கிராமத்திற்குச் சென்று 10 தினங்களை கடக்கின்ற போதும் அந்த மக்கள் தமது சொந்த காணிகளில் சுயமாக குடியமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் தவராசா தெரிவித்தார். முள்ளிக்குளம் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்- ”முள்ளிக்குளம் …

Read More »

மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்திய தூதரகம் முற்றுகை

பாரத பிரதமர் நரேந்திர மோடி நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், மீனவர் பிரச்சினை தொடர்பாக அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அகில இலங்கை ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர் சங்கத்தினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது எல்லைக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களால் கடல் வளம் அழிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்த மீனவர் சங்க பிரதிநிதிகள், அத்துமீறும் …

Read More »

தென் கொரியா அதிபர் ஆகிறார் மூன் ஜே-இன்: கருத்துக் கணிப்பில் தகவல்

தென் கொரியா அதிபர் தேர்தலில் லிபரல் கட்சியின் மூன் ஜே-இன் வெற்றி பெறுவார் என்று வாக்குப் பதிவுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. தென் கொரியாவில் அதிபராக இருந்த பார்க் கியூன்-ஹை மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து அவர் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து அங்கு அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி தென் கொரியாவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் …

Read More »