சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பில் ஜோன்சன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பாகவே அமெரிக்கா காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்சன் மற்றும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் ஆகியோர், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் கலந்துரையாடியுள்ளனர். இதனிடையே, அமெரிக்க பிரதிநிதிகள் சபை …
Read More »மே 18 முல்லைத்தீவுக்கு மைத்திரி செல்லலாமா? – ஆராய்கிறது அவரது செயலகம்
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருவதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில், ஜனாதிபதி செயலகம் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. வறுமை ஒழிப்பு தேசிய நிகழ்சித் திட்டத்தை எதிர்வரும் 18ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஆரம்பிப்பது என்றும், இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் …
Read More »முடிந்தால் ஆட்சியைக் கவிழ்த்துக் காட்டுங்கள்! – மஹிந்த அணிக்கு அரசு சவால்
“ஒருவாரம் கால அவகாசம் தருகின்றோம் முடிந்தால் வட மத்திய மாகாண சபையின் ஆட்சியை கவிழ்த்துக் காட்டுங்கள்.” – இவ்வாறு மஹிந்த அணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மகிந்த அமரவீர சவால் விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்குச் சார்பாகச் செயற்பட்டு வந்த வட மத்திய மாகாண அமைச்சர் கே.எச்.நந்தசேனவை அமைச்சுப் பதவியிலிருந்து தூக்கிவிட்டு, அப்பதவிக்கு மாகாண சபை உறுப்பினர் எச்.ஹேரத் …
Read More »எந்தவொரு மாகாண சபையின் ஆட்சியையும் மஹிந்த அணியால் பிடிக்கவே முடியாது! – சு.க. திட்டவட்டம்
மஹிந்த அணியால் வட மத்திய மாகாண சபையின் ஆட்சியையோ அல்லது வேறு எந்த மாகாண சபைகளின் ஆட்சியையோ பிடிக்கவே முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கா தெரிவித்துள்ளார். வட மத்திய மாகாண சபையின் பெரும்பான்மை மஹிந்த அணியிடம் சென்றுள்ள நிலையிலயே சு.கவின் பொதுச் செயலர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “மாகாண சபைகளில் ஆட்சி மாற்றங்கள் இடம்பெறாது. எந்தவொரு சவாலையும் எதிர்நோக்க …
Read More »மூன்று மாகாண சபைகளின் ஆட்சியைக் கைப்பற்ற மஹிந்த அணி தீவிர முயற்சி!
வட மத்திய, மத்திய மற்றும் தென் மாகாண சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மஹிந்த அணியான பொது எதிரணி தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது எனத் தெரியவந்துள்ளது. பொது எதிரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் மாகாண சபைகளின் அரச தரப்பு உறுப்பினர்களை நீக்குவதற்கு மைத்திரி அரசு எடுத்த அதிரடி முடிவுகளின் பிரதிபலனாக அம்மாகாண சபைகளில் கடும் அதிருப்தி நிலவி வருகின்றது. அத்துடன் பெரும்பாலான உறுப்பினர்கள் சுயாதீனமாகச் செயற்படத் தீர்மானித்துள்ளனர். வட மத்திய, மத்திய மற்றும் …
Read More »ரணிலின் கோரிக்கையின் பிரகாரமே மலையகத்துக்கு 10 ஆயிரம் வீடுகள்!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த வேண்டுகோளின் பிரகாரமே மலையக மக்களுக்கு 10 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு இந்தியா முன்வந்துள்ளது என்று பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் புதுடில்லி சென்றிருந்தார். இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்பின்போதே ரணிலால் மலையக மக்களுக்காக மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 10 …
Read More »இந்தியா உள்ளிட்ட சுமார் 100 நாடுகளை அச்சுறுத்திய சைபர் தாக்குதல்: மூல காரணம் என்ன?
இந்தியா உள்ளிட்ட சுமார் 100 நாடுகளின் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை முடக்கிய சைபர் தாக்குதல்களினால், பல்வேறு துறைகளின் பணிகள் பாதிக்கப்பட்டன. தொழில்நுட்ப வசதிகள் எந்த அளவுக்கு நமக்கு விரைவான சேவையை வழங்கி, நமது பணிச்சுமையை குறைக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்துகளும் அதிகரிக்கின்றன. சைபர் தாக்குதல்களால் தொழில்நுட்பங்கள் முடக்கப்படும்போது மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. உலக சமுதாயத்திற்கு இந்த சைபர் தாக்குதல் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்நிலையில், நேற்று உலகம் முழுவதும் உள்ள பல்வேறு …
Read More »இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி
இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்திய ராணுவ வீரர்களை மட்டுமல்லாது அப்பாவி மக்களையும் குறிவைத்து பாகிஸ்தான் துருப்புகள் தாக்குதல்கள் நடத்துகின்றன. இந்த மாத தொடக்கத்தின்போதுகூட காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணகாதி பகுதியில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த …
Read More »ஹபீஸ் சயீத் அமைப்புக்கு எதிராக பொருளாதார தடை: அமெரிக்கா அதிரடி
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் அமைப்புக்கு எதிராக பொருளாதார தடை விதித்து அமெரிக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்க அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த நிலையில், மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி நடந்த தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தாவா அமைப்பின் நிறுவனரான ஹபீஸ் சயீத்தின் நிறுவனம் மற்றும் பல தனிப்பட்ட நபர்கள் …
Read More »மலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள்! – பிரதமர் மோடி உறுதி
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் மலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். ஹட்டன் – நோர்வூட் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்துகையில், ஆயிரக்கணக்கான மலையக மக்களுக்கு முன்னிலையில் இந்திய பிரதமர் இவ் வாக்குறுதியை வழங்கியுள்ளார். இதன்போது பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில்- ”மலையக மக்களை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. முதல் தடவையாக …
Read More »