காலி மாவட்ட செயலகத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இந்த தாக்குதல் எப்போது மேற்கொள்ளப்பட்டது என்பது இன்னும் உறுதியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தான் சைபர் தாக்குதல் குழுவினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவே காலி மாவட்ட செயலகத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு ஜிந்தாபாத், இஸ்லாம் மதத்திற்கு ஜிந்தாபாத், முஸ்லிம்களுக்கு ஜிந்தாபாத், பாகிஸ்தான் இராணுவத்திற்கு ஜிந்தாபாத் மற்றும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. குழுவிற்கு ஜிந்தாபாத் என அந்த இணையத்தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. …
Read More »இந்தியா தெற்கிற்கு வழங்கினால் சகோதரத்துவம் மலையக தமிழர்களுக்கு வழங்கினால் இனவாதமா?
இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கின்ற பொழுது அதனை ஒரு சிலர் இனவாத கண் கொண்டு பார்க்கின்றார்கள்.ஆனால் இந்தியாவில் இருந்து வைத்தியர்கள் இங்கு வருகின்ற பொழுது அவர்களிடம் வைத்திய சேவையை பெற்றுக் கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம்.எத்தனையோ இந்திய வைத்தியர்கள் இன்று இலங்கையில் பல சத்திர சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து பல உயிர்களை பாதுகாக்கின்றார்கள்.ஆனால் மலையக பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து அழைப்பதை ஒரு …
Read More »உழவு இயந்திரத்துடன் ரயில் மோதி 2 இளைஞர்கள் பரிதாப மரணம்!
வவுனியா, புளியங்குளம், பூதூர் செல்லும் வீதியிலுள்ள ரயில் கடவையில் இன்று பிற்பகல் உழவு இயந்திரத்துடன் ரயில் மோதியதில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். கொழும்பிலிருந்து யாழ். நோக்கிச் சென்ற ரயில், பூதூர் பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையைக் கடந்த உழவு இயந்திரத்துடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதியான பூதூரைச் சேர்ந்த ஜெகநாதன் ரவீதரன் (வயது – 20), உதவியாளரான புளியங்குளத்தைச் சேர்ந்த ரவீந்திரன் கீர்த்தீபன் (வயது – 21) …
Read More »விடுதலைப்புலிகளின் அடையாளங்கள் இப்போதும் முள்ளிவாய்க்கால் மண்ணில்!
ஆயுத ரீதியான தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் விடுதலைப்புலிகளின் எச்சங்கள் பலவற்றை தன்னகத்தே சுமந்த வண்ணம் இந்த உலகுக்கு பல செய்திகளை எடுத்துக் கூறிய நிலையில் உள்ளன. விடுதலைப் புலிகள் தங்களை படையணி ரீதியாகவோ அல்லது நிர்வாக ரீதியாகவோ அடையாளப்படுத்துவதற்காக தகடுகளில் இலக்கம் பொறிக்கப்பட்டு மூன்று இடங்களில் அணிந்து கொள்வார்கள். அவர்கள் இடுப்பு பகுதியில் அணியும் தகடு ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று சிக்கியுள்ளது. …
Read More »மே 18ஆம் திகதி முற்பகல் 9.30 இற்கு மூன்று நிமிடங்கள் மௌன அஞ்சலி!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் இறுதி நாளான எதிர்வரும் மே 18ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணி தொடக்கம் 3 நிமிட நேரம், தமிழர்கள் வாழும் தேசம் எங்கும், சிரம்தாழ்த்தி மௌன அஞ்சலியை நடத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “மே 18ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் கூடும் மக்கள் கூட்டம் 3 நிமிட நேர மௌன அஞ்சலியை …
Read More »இரண்டு விக்னேஸ்வரன்களும் கடமைகளைச் சரியாக நிறைவேற்ற வேண்டும்! – நல்லை ஆதீன முதல்வர் வலியுறுத்து
“வடக்கில் முக்கிய பதவிகளை வகிக்கும் 2 விக்னேஸ்வரன்களும் தங்களது கடமையைச் சரியாகவும் நேர்த்தியாகவும் செய்ய வேண்டும். எமது சமூகத்துத்தின் முக்கியமான பொறுப்புக்கள் உங்கள் இருவர் கைகளில்தான் உள்ளன.” – இவ்வாறு நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமசாரிய சுவாமிகள் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரனுக்குப் பாராட்டு விழா இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. பேராசிரியர் வ.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற …
Read More »யாழில் பொலிஸ் அதிகாரிகளுக்கிடையில் கைகலப்பு!
யாழ்ப்பாண நகரப்பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் மதுபானம் அருந்துவதற்காகச் சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இரு பொலிஸ் அதிகாரிகளும் தற்செயலாக சந்தித்த போது பழைய விரோதம் காரணமாக அவர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதுடன் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. நிலைமை மோசமடைவதை அவதானித்த விருந்தினர் விடுதியின் முகாமையாளர் இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதுடன், இது குறித்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் …
Read More »ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையால் 1400 உற்பத்திகளுக்கு சந்தைவாய்ப்பு!
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை மூலம் 1400 உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்பு கிடைக்கும் என சுதந்திர வர்த்தக வலய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “பாரிய அளவில் வரிச்சலுகை கிடைப்பதால், இலங்கையின் உற்பத்திகள் ஐரோப்பிய நாடுகளில் மலிவான விலைகளில் கிடைக்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை மூலமாக இலங்கையின் ஆயிரத்து …
Read More »கீதா குமாரசிங்க விவகாரம்: இடைக்கால தடையுத்தரவு மேலும் நீடிப்பு
கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்யும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக கீதா குமாரசிங்க தாக்கல் செய்திருந்த மனு இன்று (திங்கட்கிழமை) மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுவின் மீதான விசாரணை நிறைவடையும் வரை இடைக்கால தடையுத்தரவை உச்ச நீதிமன்றம் நீடித்துள்ளது. இரட்டை பிரஜாவுரிமை கொண்டுள்ள கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க முடியாதென மேன்முறையீட்டு …
Read More »வடமத்திய மாகாண முதலமைச்சரை நீக்கும் கோரிக்கை நிராகரிப்பு!
வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்னவை நீக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 17 பேர் கையெழுத்திட்ட மகஜரை மாகாண ஆளுநர் ஏற்க மறுத்துள்ளார். ஏற்கனவே முதலமைச்சராக இருந்த எஸ்.எம்.ரஞ்ஜித்திற்கு குறித்த பதவி வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்து இன்று (திங்கட்கிழமை) இவ் உறுப்பினர்கள் மகஜரை கையளிக்க முற்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த மகஜரை ஏற்பதற்கு ஆளுநர் பி.பி.திசாநாயக்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Read More »